உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியதிகாரம்

67


கரி

-

காரம் = மிகுதி, கடுமை, வலிமை, கடுஞ்சுவையான

உறைப்பு.

அதிகரித்தல் (மீமிசைச்சொல்) = மிகுதல், பேரளவாதல். அதிகரிஅதிகாரம் = ஆட்சிவலிமை, நூலின் பெரும்பகுதி. அதிகாரி = அதிகாரமுள்ளோன்.

வடமொழியில் அதிக்ரு என்னும் கூட்டுச்சொல்லை மூலமாகக் காட்டி, அதற்குத் தலைமையாயிருத்தல் என்று பொருளுரைப்பர். க்ரு(செய்) என்னும் சொற்சேர்க்கையால் அப் பொருள்

பெறப்படாமை காண்க.

மேலும், அதிகாரம் என்னும் சொல் வடமொழியில் நூற் சிறுபிரிவைக் குறிப்பதாக மானியர் வில்லியம்சு குறிப்பர். தமிழில் தொல்காப்பியத்திற்போல் நூற் பெரும்பிரிவைக் குறிப்பதே மரபு. திருக்குறளில் பதிகம் என்னும் பெயருக் கீடாக அதிகாரம் என்னும் சொல்லைப் புகுத்தியது உரையாசிரியர் தவறு போலும்!

அதிகாரி

-

அதிகாரின்

அந்த – ஹந்த (nt) - இ.வே.

அத்தன் (தந்தை) - அத்தோ! - அந்தோ! - அந்த!

அந்த! - அந்தவோ! - அந்தகோ!

சிறு பிள்ளைகள் ஏதேனுமொன்று கண்டு வியக்கும் அல்லது அஞ்சும் அல்லது இரங்கும் அல்லது வருந்தும் நிலையில், தம் பெற்றோரை (சிறுவர் தந்தையையும் சிறுமியர் தாயையும்) விளிப்பது இயல்பாதலால், பெற்றோர் பெயரின் விளிவடிவுகள் மேற்குறித்த உணர்ச்சிகளை வெளியிடும் குறிப்பிடைச் சொற்களாயின.

ஒ.நோ: அச்சன் - அச்சோ; ஐயன் - ஐய - ஐயவோ -ஐயகோ, ஐயோ.

அந்தி சந்தி (dh)

உத்து (ஒத்து) - அத்து. அத்துதுல் அத்து. அத்துதுல் = ஒட்டுதல், பொருத்தித் தைத்தல்.

அத்து - அந்து - அந்தி. அந்தித்தல் = 1. நெருங்குதல்.

"வேத மந்தித்து மறியான்'

2. கூடுதல், ஒன்றுசேர்தல்

இனி, உம் - உந்து - அந்து - அந்தி என்றுமாம்.

(திருவிளை. நகர. 106)