76
வடமொழி வரலாறு
அரணம்
-
அரண்ய (இ.வே.)
அரண் = காவற்காடு. அரண் - அரணம் காடு.
66
'காவல்வேல் காவற் காடிவை யரணே
""
"காடும் எயிலுங் கவசமும் அரணம் ”
(பிங்.)
(பிங்.)
மலையரண் காட்டரண் மதிலரண் நீரரண் நவையறு சிறப்பின் நால்வகை யரணே
99
(திவா.)
(பிங்.)
'மலையரண் காட்டரண் மதிலரண் நீரரண் வகையுறு சிறப்பின் நால்வகை யரணே”
வடமொழியார் காட்டும் மூலம் :
ரு (ச) = சொல். ௫ -அரண = ரு = தொலைவான, அயலான.
அரண - அரண்ய = தொலைவான அல்லது அயலான இடம், காடு, அடவி, பாலை.
அரத்தகம்
-
அலக்தக, அலக்தகம்
அர் - அரன் சிவன். அர் - அரக்கு = செம்மெழுகு.
அர் - அரத்தம்
=
செந்நீர் (குருதி). அரத்தம் - அரத்தகம்
=
செம்பஞ்சுக் குழம்பு. எல் - எர் -இ-அர்.
அரத்தம்' - ரக்த
அரத்தம் = செந்நீர்.
இதற்குத் தமிழ்வேர் மேற்காட்டப்பெற்றது.
வடவர் நிறமூட்டப்பெறு (to be dyed or coloured) என்னும் பொருளுள்ள ரஞ்ச் (ranj) அல்லது ரஜ் என்னும் சொல்லை மூலமாகக் காட்டுவர்.
அரத்தம்2 - அலக்த, அலக்தஸ்
அரத்தம் = அரக்கு (திவா.) .
அரத்தன் - ரக்த
அரத்தன் = செவ்வாய் (பிங்.).
அரத்தம் என்னும் சொற்குத் தமிழில் சிகப்பு, செந்நீர், பவழம், செம்பரத்தை, செங்கழுநீர், செங்கடம்பு, செம்பருத்தி, செவ்வாடை (துகில்) என்னும் பொருள்க ளிருப்பதையும், வடமொழியில் அ+ரக்த என்று பிரித்துப் பொருந்தா மூலங் காட்டுவதையும், நோக்குக.