மொழியதிகாரம்
121
ஒ.நோ: கன்னி - கன்னிகை.
குடிகை குடிசை குடிஞை.
-
"தூசக் குடிஞையும்"
(பெருங். இலாவாண. 12:43)
வடவர் கை என்பதைக் கா என்று திரித்திருக்கின்றனர்.
கைக்குள் அடக்கமானது அல்லது கையிலிருப்பது சிறிதா யிருக்கு மாதலால், கை என்னும் சினைப்பெயர் சிறுமைப்பொருட் பின்னொட் டாயிற்று.
குடில்
-
குடிலம்
ஒ.நோ: கைக்குட்டை, கைக்குடை, கைத்தடி, கைப்பிள்ளை,
கைவாள்.
குடீர (t) = குடிசை
குடி + இல் = (குச்சில்).
குடில்
=
குடிசையினுஞ் சிறிய இல், குற்றில்
ஆட்டுக்குடில் என்னும் வழக்கை நோக்குக.
இங்கு இல் என்பது ஒரு சிறுமைப்பொருட் பின்னொட்டு. ஒ.நோ : தொட்டி - தொட்டில், புட்டி - புட்டில்.
குடில் (t) = வளைவு.
குடிகுடில்-குடிலம் = வளைவு.
"கூசும் நுதலும் புருவமுமே குடில மாகி யிருப்பாரை" (தனிப்
பாடல்).
-
குடிலை குடிலா (t)
T
குடி - குடில் - குடிலை = 1 .ஓங்காரம். 2. தூய மாயை. இதன் விளக்கத்தை என் 'தமிழர் மதம்' என்னும் நூலுட் காண்க.
குடும்பம் குடும்ப (t)
குடி =
வீடு.வீட்டிலிருக்கும் மனைவி, மனைவியும் மக்களும் சேர்ந்த கூட்டம், கூட்டுக் குடும்பம், குலம், குலத்தார் குடியிருப்பு, ஊர், கொடிவழி
ஒ.நோ : மனை = வீடு, மனைவி. இல் = வீடு, மனைவி, குடும்பம், சரவடி, ஊர்.
மனைவியைக் குடி என்பது உலக வழக்கு.
எ.டு : இருகுடி = இருமனைவியர்.
குடி = (குடிம்பு) - குடும்பு.
-
ஒ.நோ:குழி (குழிம்பு) - குழும்பு = குழி.