உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியதிகாரம்

121


ஒ.நோ: கன்னி - கன்னிகை.

குடிகை குடிசை குடிஞை.

-


"தூசக் குடிஞையும்"

(பெருங். இலாவாண. 12:43)

வடவர் கை என்பதைக் கா என்று திரித்திருக்கின்றனர்.

கைக்குள் அடக்கமானது அல்லது கையிலிருப்பது சிறிதா யிருக்கு மாதலால், கை என்னும் சினைப்பெயர் சிறுமைப்பொருட் பின்னொட் டாயிற்று.

குடில்

-

குடிலம்

ஒ.நோ: கைக்குட்டை, கைக்குடை, கைத்தடி, கைப்பிள்ளை,

கைவாள்.

குடீர (t) = குடிசை

குடி + இல் = (குச்சில்).

குடில்

=

குடிசையினுஞ் சிறிய இல், குற்றில்

ஆட்டுக்குடில் என்னும் வழக்கை நோக்குக.

இங்கு இல் என்பது ஒரு சிறுமைப்பொருட் பின்னொட்டு. ஒ.நோ : தொட்டி - தொட்டில், புட்டி - புட்டில்.

குடில் (t) = வளைவு.

குடிகுடில்-குடிலம் = வளைவு.

"கூசும் நுதலும் புருவமுமே குடில மாகி யிருப்பாரை" (தனிப்

பாடல்).

-

குடிலை குடிலா (t)

T

குடி - குடில் - குடிலை = 1 .ஓங்காரம். 2. தூய மாயை. இதன் விளக்கத்தை என் 'தமிழர் மதம்' என்னும் நூலுட் காண்க.

குடும்பம் குடும்ப (t)

குடி =

வீடு.வீட்டிலிருக்கும் மனைவி, மனைவியும் மக்களும் சேர்ந்த கூட்டம், கூட்டுக் குடும்பம், குலம், குலத்தார் குடியிருப்பு, ஊர், கொடிவழி

ஒ.நோ : மனை = வீடு, மனைவி. இல் = வீடு, மனைவி, குடும்பம், சரவடி, ஊர்.

மனைவியைக் குடி என்பது உலக வழக்கு.

எ.டு : இருகுடி = இருமனைவியர்.

குடி = (குடிம்பு) - குடும்பு.

-

ஒ.நோ:குழி (குழிம்பு) - குழும்பு = குழி.