உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

வடமொழி வரலாறு


இவற்றுள், TH, X (ks), PH, KH, PS

என்னும் ஐந்தே புணர்மெய்கள்; TH, PH, KH என்னும் மூன்றே மூச்சொலிப் புணர்மெய்கள். X (ks) வடமொழியில் க்ஷ (ks) ஆக வளர்ந்துள்ளது. இலத்தீன் குறுங்கணக்கு (21)

A, B, C, D, E, F, Z, H, I (J), K, L, M, N, O, P, Q, R, S, T, V (U), X.

இவற்றுள் X (ks) ஒன்றே புணர்மெய், அதுவும் மூச்சொலி யற்றது. C = G, J = Y.

தியூத்தானியக் குறுங்கணக்கு (ஆங்கிலம்)

A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z.

இவற்றுள் X (ks) ஒன்றே புணர்மெய்.

கிரேக்க அரிவரி பினீசியரிடத்தினின்றும், இலத்தீன் அரிவரி கிரேக்கரிடத்தினின்றும், ஆங்கில அரிவரி இலத்தீனராகிய உரோம ரிடத்தினின்றும் பெறப்பட்டவையாகும்.

ன்று

ஐரோப்பா முழுதும் வழங்கும் ஆரியமொழி அரிவரிகள், இலத்தீன் அரிவரியைத் தழுவியவையே.

ஆங்கிலம் பிற்கால மொழியாதலால், சில பிற்கால வொலிகள் ணைவரிகளால் (Digraphs) குறிக்கப்பெறுகின்றன.

பல

எ-டு: ch = ச்ச, sh = ஷ.

சமற்கிருதம் ஆரியமும் திரவிடமும் கலந்த மொழியாதலின், முதிரொலிகளைக் கொண்டிருப்பதுடன்,

வல்லின ஐவகையுள்ளும் பொலி (voiced) யொலியுடனும் பொலியா (voiceless) வொலியுடனும் மூச்சொலியை ஒழுங்காகச் சேர்த்து அவற்றிற்குத் தனி வடிவம் அமைத்துள்ளது.

kh, gh, ch, jh; th, dh; th, dh, ph, bh என்னும் பத்துக் கூட்டு மெய்கட்கும், வடமொழியில் தனி வடிவம் அமைந்திருத்தல் காண்க. இந் நிலைமை வேறெம் மொழியிலு மில்லை.

(9) வடமொழி வண்ணமாலையின் பின்மை

வடமொழி வண்ணமாலையின் பின்மை பின்வருஞ் சான்று

களால் துணியப்பெறும்:

(1) வடமொழியின் பின்மை.

(2) ஆரியவேதம்

யிருந்தமை.

பன்னூற்றாண்டு எழுதாக் கிளவியா