உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண வதிகாரம்

133


வேற்றுமை யுருபேற்ற பெயரும் கால வெண் ணிடங் காட்டும் ஈறேற்ற வினையும் பதம் எனப்படும்.

(12) பெயர்ச்சொல் (ஸுபந்த)

தாது எனப்படும் முதனிலையொடு, கிருத் எனப்படும் பெயரடி யிடையொட்டும் தத்திதன் எனப்படும் வழிநிலை யிடையொட்டும் சேர்ந்த வடிவிற்குப் பிரகிருதி அல்லது பிராதிபதிகம் என்று பெயர். இப் பிராதிபதிகத்துடன் வேற்றுமை யுருபு சேரின் பெயர்ப்பதமாம். அது சுபந்தம் எனப்படும். சுப் (ஸுப்) என்பது வேற்றுமையுருபுகளை யெல்லாம் பொதுவாகக் குறிக்கும் பாணினீயக் குறியீடு. அந்தம் ஈறு.

கிருத் ஈறு கிருதந்தம் என்றும், தத்தித ஈறு தத்திதாந்தம் என்றும் சொல்லப்படும். இவை யிரண்டிற்கும் பிரத்யயம் என்பது வடமொழிப் பொதுப்பெயர்.

பிராதிபதிகத்திலும் பெயர்ப்பதத்திலும் க்ருத், தத்திதன் ஆகிய இருவகை யிடையொட்டும் சேர்ந்துமிருக்கலாம்; அவ் விரண்டி லொன்று தனித்துமிருக்கலாம்.

பால் (லிங்க)

வடமொழியில் திணையில்லை; பால்மட்டும் உண்டு. அது புல்லிங்கம் (ஆண்பால்), ஸ்திரீலிங்கம் (பெண்பால்), நபும்ஸக லிங்கம் (அலிப்பால்) என மூவகைப்படும்.

வடமொழிப் பால்வகுப்பு இயற்கையான பொருளியல்பு பற்றிய தன்று; பெரும்பாலும் செயற்கையான இலக்கண முறைபற்றியது. சில பெயர்களே உண்மையான பால் காட்டும். எ-டு: புஸ்தகம் (ஆ. பா.), சிலா(பெ. பா.) = கல்.

மனைவியைக் குறிக்கும் தாரம் (ஆ. பா.), பாரியா(பெ. பா), களத்திரம்(அ. பா) என்னும் முச்சொற்களும், பால் வேறுபடும். எண் (வசன)

வடமொழியில் ஏகவசனம் (ஒருமை), த்விவசனம் (இருமை), பஹு வசனம் (பன்மை) என எண் மூவகைப்படும்.

மேலையாரியத்தைச் சேர்ந்த தியூத்தானியத்திலும் இலத் தீனிலும் இருமையெண் இல்லை; சமற்கிருதத்திற்கு மிக நெருங்கிய கிரேக்கத்தில்தான் உண்டு.

டம் (புருஷ)

டம் தமிழிற் போன்றே வடமொழியிலும் மூன்றாம்.