உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மறைப்பதிகாரம்

161


ஒருவன் நெஞ்சை முட்போற் குத்துவது. அதனால், “உனக்குச் சுணையில்லையா?" என்று கேட்பது வழக்கம். சுரணை என்பதும் இதே பொருளதே. அது சுரி என்னும் முதனிலையினின்று திரிந்தது. ஸ்ம்ரு= நினை. ஸ்மரண = நினைவு. ஆகவே, தென்சொல் வேறு; வடசொல் வேறு.

=

சும்பன் என்பது இடக்கர்ச் சொல். சும்பன = முத்தமிடுகை. ஜயந்த = வெற்றி பெற்றவன். சே-சேந்தோன்-சேந்தன் சேயோன் (சிவந்தவன்), முருகன். அசுரனை வென்றோன் என்னுங் கருத்தில், வடமொழியில் ஜயந்த (ஜயித்தவன்) எனப் பெற்றான்.

தைத்தல் = பொருத்துதல். தை-தைச்சு-தச்சு = மரத் துண்டுகளை அல்லது பலகைகளைப் பொருத்திச் செய்யும் வேலை. ஒ. நோ: ஐந்து- அஞ்சு, மைந்தன்-மஞ்சன். Joiner என்னும் ஆங்கிலச் சொல் இப் பொருளதே. தக்ஷ் வட்டு.தக்ஷன் மரம்வெட்டி. இது வேறு சொல்லாயிருத்தல் வேண்டும்; அல்லது தமிழ்ச்சொல்லின் திரிபாதல் வேண்டும்.

=

தாய்-தாயம் = தாயினின்று பெறும் உரிமை. முதற் காலத்தில் தாயே குடும்பத் தலைவியாயிருந்தாள். தாய்நாடு, தாய்மொழி என்னும் சொற்களை நோக்குக. இனி, தா (தந்தை)-தாயம் என்று கொள்ளினுங் குற்றமாகாது. தாயம் (உரிமை)பற்றிப் பாண்டவ கௌரவர்போற் பண்டை நாளிற் காயுருட்டி விளையாடியதால், அவ் வாட்டிற்குத் தாயம் என்பது கருமிய அல்லது விளைவாகு பெயராயிற்று. பாணினியார் இச் சொல்லைக் கொடை என்னும் பொருளில் தா என்னும் வினையினின்று திரித்திருக்கின்றனர். தா என்பது தூய தமிழ்ச்சொல்லென்று முன்னரே விளக்கப் பெற்றது.

நால்-நாலி-தாலி=கழுத்தில் தொங்கும் அணி. சிறுவர் கழுத்தில் தொங்கிய ஐம்படைத் தாலியும், வெள்ளாட்டுக் கழுத்தில் தொங்கும் சதைத்தாலியும் போல, மணமகள் அல்லது மனைவி கழுத்தில் தொங்கும் மங்கலவணி. Pendant என்னும் ஆங்கிலச் சொல்லையும் நோக்குக. வடமொழியாளர் பனையோலை யென்றும் காதணி யென்றும் பொருள் கூறுவர். இதன் பொருந்தாமை காண்க. மேலும், தாலி கட்டும் வழக்கம் தமிழரதே என்பதையும் நோக்கித் தெளிக.

திகைதல் = முடிதல், முடிவாதல். இன்னுந் திகையவில்லை என்பது நெல்லைநாட்டு வழக்கு. தமிழில் எல்லைக் கருத்து திசைக் கருத்தையுந் தழுவும். எல்லை = முடிவு, திசை.

"ஐந்தா வதனுரு பின்னும் இல்லும்

நீங்கலொப் பெல்லை யேதுப் பொருளே

""

(299)

என்று நன்னூலார் கூறுதல் காண்க.