CO
6
இளங்குமரனார் தமிழ்வளம் – 9
“ஈக்கு விடம் தலையில் உண்டு; கொடிய தேளுக்கு விடம் கொடுக்கில் உண்டு; பாம்புக்கு விடம் பல்லில் உண்டு; தீயவருக்கோ உடம்பில் ஒவ்வோர் அணுவிலும் விடம் உண்டு." அதனால்?
"கொம்புள்ளவற்றுக்கு ஐந்து முழம் விலகுக; குதிரைக்குப் பத்து முழம் விலகுக; யானைக்கு ஆயிரம் முழம் விலகுக; தீயவர்க்கு மட்டும் கண்ணில் அகப்படாத தொலைவு விலகுக" என்றனர். இந்நிலைமையில் இன்ப துன்பம் ஆக்கும் விருப்பு வறுப்பு அகல யாரைச் சேர்வது?
துலைக்கோல் தட்டு உள்ளது. பொருள் வைக்கவும் எடுக்கவும் தாழ்கிறது உயர்கிறது. ஏறி ஏறி இறங்குகிறது. இப்படித் தான் மனிதனும் இன்ப துன்பங்கள் அடைந்து மேலும் கீழும் ஏறி இறங்கித் துன்புறுகின்றான். துலைக்கோல் தட்டில் எப்பொருளும் இல்லாவிடில் ஏறவும் செய்யாது; இறங்கவும் செய்யாது; சமனிலையில் நின்றுவிடும். இந்நிலைமையை மனிதன் அடைந்து விட்டானோ
ன்பமில்லை துன்பமில்லை! இதனைப்பெற வழியென்ன? இதனை இயல்பாகக் கொண்டிருக்கும் இறைவனை அடைக்கலம் ஆதல் வேண்டும் என்பது ஆன்றோர் நெறி.
இறப்பும் பிறப்பும், இன்பமும் துன்பமும், வேண்டுதல் வேண்டாமையும் இல்லாதவன் யாவன்? அவனே இறைவன். அவ்விறைவனைப் பற்றுதலே துன்பமில்லா திருக்க வழி.
"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல"
என்பது வள்ளுவர் வாய்மொழி!