திருக்குறள் கட்டுரைகள்
13
ன
போட்டுக் குழி தெரியாதவாறு மூடுவர். யானைக்கு விருப்பான இலை தழைகளெல்லாம் குவிக்கப் பெற்றிருக்கும். அதனைக் கண்ட ஆவலில் யானை விரைந்து போகும்; பொய்க் குழிக்குள் யானை வீழும்; வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும்! பின்னர் பட்டினி போட்டும், அச்சுறுத்தியும், விரும்பும் உணவு தந்தும் ஓரளவு கட்டுப்படுத்திப் பழகிய யானையைக் கொண்டு, அதனையும் வயப்படுத்துவர். அப்பப்பா! என்னபாடு யானையைப் பிடிக்கவும் பழக்கவும்?
யானை கட்டுக்கு அடங்காத போது செய்த அழிவும் சரி; கட்டுக்கு அடங்கிய போது செய்யும் ஆக்க வேலைகளும் சரி- மிகமிக வியப்பானவையே! காட்டு மரங்களை யானை போல இழுத்துவர எவரால் முடியும்? எவ்விலங்கால் இயலும்? விலங்கு விளையாட்டு நடத்துவோர் அதனை எத்தனை வகைகளிலெல்லாம் பழக்கப் படுத்திவிடுகின்றார்! அந்தப் பெரிய உருவம் சிறிய முக்காலியில் உட்காருவது வியப்பு இல்லையா?
கரைபுரண்டோடும் காட்டாற்றைத் தடுத்து அணை கட்டினால் எவ்வளவு அழிவுகள் அகல்கின்றன! பயன்கள் விளைகின்றன; காடுகள் கழனிகளாக மாறுவது கரைகளால் தானே! இவ்வாறு கரையும் கட்டுப்பாடும் யானைக்கும், ஆற்றுக்கும் மட்டும்தானா வேண்டும். மக்களுக்கு வேண்டாமா?
யானையைக் கட்டுப்படுத்துகிறான் மனிதன்; ஆற்று வெள்ளத்தையும் அவன் கட்டுப்படுத்துகிறான். இன்னும்