உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. உண்டா? இல்லையா?

மணலில் குடம் குடமாக நீரைச் சாய்க்கிறோம். நீர் நின்றபாடு இல்லை ல ; சற்று நேரத்துள் நீர் விட்டதற்கு அடையாளமும் இல்லாது போய்விடுகின்றது.

கரிசல் மண் தரையில் ஒரு குடம் நீர் விட்டால் போதும்; நிலம் எளிதில் நீரை உறிஞ்சுவது இல்லை; உறிஞ்சிய பின்னரும் ஈரப்பசை எளிதில் போவது இல்லை.

மணல் நிலத்தில் நாள் தவறாமல் மழை பெய்தாலும் வறட்சி காணல் கண்கூடு. கரிசல் தரையில் உழுது விதைக்கும் போது ஒரு மழை பெய்தால் போதும் ; அதன் ஈரங்கொண்டே பயன் தருவது தெளிவு. ஓரிடத்தே நீர்ப்பசை நெடிது நிற்கவும், ஓரிடத்தே நீர்ப்பசை உடனுக்குடன் அற்றுப் போகவும் காரணம் என்ன? நீர் உறிஞ்சும் அணுக்களின் பெருக்க சுருக்கத் தன்மையே! இத்தகைய தன்மையுடைய வீடுகள் ல்லையா?

நீர் நில்லா மணல் வீடுகளும் நாட்டில் உண்டு ; நீர் நிற்கும் கரிசல் மண் வீடுகளும் நாட்டில் உண்டு; வீடு கட்டப்பட்ட பொருளோ கட்டும் இடமோ பற்றியவை அல்ல மணல் கரிசல் என்பவை ! வீட்டில் வாழும் மக்களைப் பற்றியவையே!

சிலர் வாழ்வு மணல் வாழ்வாக உளது ; சிலர் வாழ்வு கரிசல்மணல் வாழ்வாக உளது. மணல் அன்னவர்கள் எவ்வளவு வருவாய் வந்தாலும், வரவு அறியு முன்னரே இன்ன வழி என்று இல்லாமல் செலவிட்டு வறட்சிக்கு ஆட்படுகிறார்கள். ஐந்து பேர்கள் இருந்து கொண்டு திங்களுக்கு 1000 ரூபாய் வருவாய் வந்தாலும் அது கொண்டு குடித்தனம் நடத்த முடியாமல் 5, 10 நாட்கள் கடக்கு முன்னரே கைமாற்று கடன் விற்பனை என்று திரிகின்றார்கள். போகும் பொழுதும்-உலக வாழ்விலிருந்து விடைபெற்றுக் கொண்டு போகும் பொழுதும்-ஐம்பதினாயிரம் நூறாயிரம் என்று பெண், பிள்ளைகள் மேல் கடன் ஏற்றி வைத்து, இழுபறியோடு, ஏச்சுப்பேச்சோடு, வழக்கு வதைகளோடு போகின்றனர்.