24
இளங்குமரனார் தமிழ்வளம் 9
அருந்தினோரது பாராட்டுதலுக்கு உரியதாகின்றது. சுருங்கக் கூறின், தான் தோன்றிய பயனை எய்துகின்றது.
மாசுபடிந்த நீர்க்கிணறுபோல்வாரும் இல்வாழ்வு நடாத்துகின்றனர்; மணிநீரன்ன நீர்க்கிணறு போல் வாரும் இல்வாழ்வு நடாத்துகின்றனர். எவர் வார்வு பயன் வாழ்வு? எவர் வாழ்வு நல்வாழ்வு? அறவாழ்வு?
ழவன்,போட்டமுதலையும்,
உழுது விதைத்துப் பாடுபடும் உழவன், போட்ட முதலையும், உழைத்த உழைப்புக்கு ஊதியத்தையும் பயிர்விளைந்து பயன்தந்த பொழுதிலே எடுத்து மகிழ்கின்றான். இது நல்லுழவன் செல்லும் நெறி! அதுபோலவே அன்புப் பண்புடன் இல்லறம் நடாத்தும் ஒருவன் 'அறம்' என்னும் பயனை அடைதல் வேண்டும். அறப்பயன் பெற்ற வாழ்வே வெற்றி வாழ்வு-பிறருக்கு எடுத்துக் காட்டாம் வாழ்வு!
இதனை உலகோர் உணரவேண்டும். உணர்ந்து வாழ்வை இன்பப் பூங்கா ஆகவும், பயன்மிக்க பழச் சோலையாகவும் ஆக்கவேண்டும் என்று கருதினார் வள்ளுவர். அவர் எண்ணிய நல்லெண்ணம்.
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
என்னும் குறள் மணியாய் உருப்பெற்றுத் தன்னொளி பரப்பி நன்னலம் புரிகின்றது!