இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருக்குறள் கட்டுரைகள்
27
கை மாற்று வாங்கியும், கடன் வாங்கியும் நாளும் பொழுதும் கழித்து வாழ்வது இல்லையா!
வீட்டுக்கு வெளியே சென்று கடன் ஆற்றுபவன் கணவன்: வீட்டில் இருந்து செயலாற்றுபவள் மனைவி; பொருள் தேடி வருபவன் கணவன்; பொருந்திய வழிகளிலே செலவிடுபவள் மனைவி ! மழை தவறாமல் பெய்ததால் மட்டும் பயனுண்டா? தேக்கி வைக்கும் அணை வேண்டுமே ! திருப்பிவிடும் கால்வாய், வாய்க்கால், வயல் வேண்டுமே! கரையாகக் குடும்பத்திற்கு இருப்பவள் எவள்? அவளே இல்லாள்!
முகில்.
C
G