உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ்வளம் 9

தனால்தான் பெண்ணிற்கு வேண்டிய பண்புகளைக் கூறவந்த பெரியோர்கள் கணவன் வருவாய்க்கு ஏற்பச் செல விட்டு வாழ்பவளே வாழ்க்கைத் துணைவியாவாள் என்றனர். அப்படி இல்லாதவள் வாழ்க்கைக்குப் பிணியாக தீராப்பிணியாக இருப்பவள் என்பதுதானே அவர்கள் கருத்து.

முரிவாய் ஆன அடுப்பிலே, மூளிவாய் ஆன சட்டியிலே, உப்பின்றி வெந்த குப்பைக் கீரையைத் தின்று உயிர்வாழும் வீட்டிலே இருக்கும் அமைதியும் இன்பமும் பத்துவகைக் கறியுடனே பாங்காய்ச் சமைத்துண்ணும் வீட்டிலே நெய்யில் லாமையால் இருப்பது இல்லை. கட்டிய கந்தைத் துணியிலுள்ள அழுக்கினைப் போக்க நனைத்து அடித்தால் பஞ்சுபஞ்சாகப் பறக்கும் ஏழைகள் வீட்டிலே தவழும் அமைதி வாழ்வு. நூலாடைகள் பலவாக இருந்தும், பட்டாடை இல்லாக் குறை கருதிய வீடுகளில் இருப்பது இல்லை. கூழுக்குத் தாளமிடும் வீட்டிலே உள்ள பொறுப்புணர்ச்சி, பாலுக்குச் சீனியில்லை என்று ஏங்கும் வீட்டிலே இருப்பது இல்லை! ஏன்? இல்லாளின் பண்புடைமைக் கேற்ப அமைவதே குடும்ப அமைதியும் வாழ்வும்!

ஆகலின் ஒருவன் எந்த நல்லபேறுகளைப் பெற்றாலும் சரி, பெறாவிட்டாலும் சரி நற்குண நற்செயல் உடைய மனையாளைப் பெறுதல் வேண்டும். அவ்வாறு ஒருவன் பெற்றானே ஆயின் அவனுக்கு இல்லாததென எதுவும் இல்லை; எல்லாமும் உண்டு. அவளிடம் நற்குண நற்செயல்கள் இல்லையேல் வேறு எவை எவை இருந்தும் அவற்றாலெல்லாம் எத்தகைய பயனும் இல்லை. எல்லாமும் இல்லை என்றே ஆகிவிடும். இதனைத் தெள்ளிதின் தெரிவிக்க விரும்பிய வள்ளுவப் பெருந்தகை,

"இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை'

99

என்றார். இதனினும் மேம்பட்ட உரை ஒன்று இல் வாழ்க்கைக்கு

உண்டா?