7. யாருக்கு இன்பம்?
வள்ளுவர் யார்?
திருக்குறளை இயற்றியவர்.
அவர் தந்தையார் பெயர் என்ன?
தெரியாது!
அவர் தாயார் பெயர் என்ன?
தெரியாது!
அவர் பெற்றோர் உலகுக்கு என்ன நன்மை செய்துள்ளனர்?
தெரியாது! ஆனால் வள்ளுவரைத் தந்தது போலான மற்றொரு நன்மையைச் செய்திருக்க முடியாது. அத்தகைய பெருநலங் கனிந்த பேற்றை எவரும் பெற்றார் அல்லர்!
வள்ளுவரால் அவர்தம் பெற்றோர்கள் பயன் பெற்றார்களா? என்ன பயன் பெற்றார்கள்?
பயன் பெற்றிருக்க வேண்டும்; நல்ல மகனைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் என்னும் பேறு பெற்றிருக்க வேண்டும். "ஒருமா மணியாய் ஓங்கும் திருமாமணியாம்” திருக்குறள் தந்த பெரு மகனைத் தந்த பெரியோர்கள் என்னும் பெருமையைப் பெற்றிருக்க வேண்டும் - வள்ளுவர் பிறந்த சில நாட்களிலே அவர்கள் இறந்திருந்தால்கூட; வாட்டும் வறுமைக்கு ஆளாகி நொடிதோறும் செத்துத் செத்து வாழ்ந்திருந்தால்கூட; எண் எழுத்து இன்னது என அறியாராய் இருந்திருந்தால் கூட!
திரு.வி.க. யாவர்? திருவாரூர் விருத்தாசலர் தந்த நன் மணியே திரு. வி. க! செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ‘துள்ளம்’ அவர் பிறக்கும் பேறு பெற்றது.
திரு. வி. க. வினால் அவர் தந்தையார் பெற்ற இன்பம்
என்ன? பயன் என்ன?
பிள்ளைப் பருவக் குறுகுறு நடையைக் கண்டும், மழலை மொழியைக் கேட்டும் இன்புற்றார். படிப்பில் முதல்வராகவும்,