30
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
பண்பில் முதல்வராகவும் பத்தாம் வகுப்பு வரை பாராட்டுப் பெற்று வளர்வதை அறிந்து இன்புற்றார். பத்தாம் வகுப்பை முடிக்கும் முன்னரே இயற்கை எய்தினார். அவர், கலியாண சுந்தரரால் என்ன பயன் பெற்றிருக்கக் கூடும்!
பயன் பெறவில்லை என்றால் கூட, அவர் பெற்ற பெருமைக்கு எல்லையுண்டோ? திரு.வி.க. போலும் ஒரு மைந்தன் பிறக்கக் கொடுத்துவைக்க வேண்டுமே என்று ஏங்கும் எத்தனை எத்தனையோ மெய்யன்பர்கள் இருக்கும் ஒன்றே விருத்தாசலர் பெற்ற பேறு ஆகலாம்.
ஒரு திரு.வி.க. பிறந்ததனால் உலகுக்கு என்ன கிடைத்தது?
ய
தமிழ் உரை நடை தகுதியுற்றது; தமிழ்க் காவிய இலக்கியம் புதுமை பொலிந்தது; தமிழ் ஆராய்ச்சி உலகம் தகவுடைய ஆய்வாளரைப் பெற்றது; தமிழ் நாட்டு மேடை 'மெல்லிய பூந்தென்றல்' காற்றைப் பெற்றது; தொழிலாளர் தமக்கென முயலாத் தோழரைப் பெற்றனர்; பெண்டிர், கண்போல் தம்மைக் கருதி வளர்க்கும் பெருந்தகையைப் பெற்றனர்; உலகச் சமயங்கள் ஊன்றுகோல் பெற்றன; அரசியல் உலகம் அறநெறி யுற்றது. திரு. வி. க. வினால் பெருமை பெறாத நல்லியக்கங்கள், நற்கழகங்கள், நற்சிந்தனைகள்-அவர் கால எல்லைக் கோட்டுக்குள்-இல்லவே இல்லை. சுருங்கச் சொன்னால் தமிழ் மொழியும், தமிழ் இனமும்,