திருக்குறள் கட்டுரைகள்
33
விண்ணேறிப் பறக்கும் பறவை போலப் பறந்து இளைப்பு களைப்பு இன்றி, உலக வலம் வருவதற்கு உதவியமை 'ரைட்' உடன் பிறந்தார்க்கு உண்டு!
இப்படி இப்படி எத்துணை எத்துணை ஆயிர மாயிரம் அறிவாளிகள் அருளாளர்கள் உலக முன்னேற்றத்திற்கு உழைத்துளர். இவர்களால் இவர் தம் பெற்றோர் தாம் இன்புற்றனரா? இவர் தம் வழி வழி வந்தோர் தாம் இன்புறு கின்றனரா? இன்புறுவரா? இன்று! "அறிவுடையவர் அகிலப் பொதுச் சொத்து" என்ற நன்னெறி கண்ட பெருமை நம் தமிழகத்திற்கு உண்டு என நெடுஞ்சிடைக் கொள்க.
மக்கள் அறிவுடைமையால் பெற்றோர் அடையும் மகிழ்ச்சியினும் மாநிலம் அடையும் இன்பமே பெரிதாம்! தனை அறநூல்,
“தம்மில் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது."
என அருளும். இத்தகைய அறிவுடைய மக்களாக வாழ விரும்பாதார் வாழ்வும் ஒரு வாழ்வாகுமோ?
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே! சான்றோன் ஆகுதல் மைந்தர்க்குக் கடனே!