46
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
சுனை நீரும் அருவி நீரும் தூயதாகத்தான் இருக்கின்றது. ஆனால் ஆற்றிலும் குளத்திலும் சேரும்பொழுது எத்தனை எத்தனைக் கழிவுகள் சேர்கின்றன! தூய நீராக இருக்க விடுகின்றனவா? இது போலவே குழந்தையிடத்தும் சரி, வளர்ந்து விட்ட பெரியோரிடத்தும் சரி இயல்பாகவே இனிமை தரக் கூடிய, இரக்கமிக்கிருக்கக் கூடிய, வஞ்சம் அற்று இருக்கக்கூடிய சொற்கள் அமைந்திருக்கின்றன. ஆனால் உணர்ச்சியை ஓட விட்டுக் கெடுத்துக் கெடுத்துப் பழகியவன், இது கொடுஞ் சொல், இது பயனிலாச் சொல், இது கேட்கத் தகாத சொல்லத் தகாத சொல், இது கொலைச் சொல் என்று அறிந்து தெளியும் அறிவின்றி மலர் வாயை மலக் கூடமாக்கித் தான் போகும் டமெல்லாம் நாற வைக்கிறான். சொல்லின் சுவையைக் கெடுப்பதுடன் தானும் கெடுகின்றான். பிறரையும் கெடுக்கின்றான்.
று
தன்னிடம் மற்றவர்கள் பணிவாக இருக்க வேண்டும் என்று எவ்வளவு தரங் குறைந்தவனும் எண்ணத் தவறுவது இல்லை; னிய சொல் தன்னிடம் பிறர் இயம்ப வேண்டும் என் விரும்பத் தவறுவது இல்லை. ஆனால் அவன் மட்டும் இவற்றைக் காற்றில் தூற்றிப் பதராய் நிற்பதை விடுவது இல்லை. இத் தகையவன் நிலைமை இரங்கத் தக்கது தான்!
கனிச்சாறு சுவைப்பதை அனுபவத்தில் காணுகின்றான். தன்னைப் போலவே பிறருக்கும் சுவைக்கும் என்று அறிந் திருக்கிறான். என்றாலும் தனக்குக் கனிச்சாறு தருவோனுக்குக் கைப்பு நீரைத் தருகின்றான் பதிலாக! எத்தனை நாட்களுக்குத் தான் கனிச்சாறு வழங்கிக்கொண்டே இருப்பான்! கைப்பு நீரை ஏற்றுப் போற்றிக்கொண்டிருப்பான்? பதிலுக்குப்பதில் ஏன் பதிலுக்குப் பன்மடங்கு தர முனைந்துவிடலாம் அல்லவா!
கண்ணாடி முன் நின்று சிரித்தால், சிரிப்பதைக் காணலாம். உதட்டைக் கடித்தால் அதைக் காணலாம், மலைமுன் நின்று பாடினால் அதே ஒலியைக் கேட்கலாம்; திட்டினால் அதைத் தான் கேட்கவேண்டும். உலகம் இவற்றைப் போன்றே உள்ளது. நாம் செய்தது போலவே நமக்கும் உலகம் பதில் செய்கிறது; நாம் சொல்வது போலவே நமக்கும் உலகம் பதில் சொல்கிறது.
பன்னீர் தெளிப்பவன் தானும் பன்னீர்த் துளியும் மணமும் பெறுகிறான். சாணநீர் தெளிப்பவன் அதன் துளியும் மணமும் பெறுகிறான். பிறருக்குப் போய்ச் சேருமுன் தனக்கு வருகின்றது