உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

இப்படித்தான் கல்லாதவனுக்கும் கற்றவனுக்கும் வேற்றுமை இல்லாத நடைமுறைச் செயல்கள் உள்ளபோது உலகம் ஏசுகின்றது; பேசுகின்றது படிப்பையும், பள்ளியையும், கற்றோரையும், கற்பித் தோரையும் இகழ்கின்றது. இது இயற்கை தானே!

""

"படித்தவன் படித்தவனாக நட என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?

படித்தவன் படித்தவனாக நடக்காமல் படிக்காதவனுக்கும் கீழ் நிலையில் நடப்பான் ஆனால் அவன் கல்வி பெறத் துணை புரிந்த சமுதாயம் (மன்பதை) கண்டிக்க உரிமை கொண்டது தானே! குழந்தை தவறும் போது தாய் வருந்துவது இல்லையா? திட்டுவது இல்லையா? குழந்தை கெட்டுப்போக வேண்டும் என்பதா அவள் கருத்து?

"கற்றவர் மாந்தர்; கல்லாதார் விலங்கு" என்று கருதும் மன்பதை கற்றும் கல்லாராய் நிற்பவரைக் கடிந்துரைப்பதில் என்ன வியப்பு?

"கற்றறிவில்லா மாந்தர் கண் கெட்ட மாடேயாவர்" என்று வெறுத்துரைக்கும் மன்பதை, பல்லாண்டுகள் கற்றும் கல்லார் நிலைமையில் ஊறிய மாந்தரை நோக்கிக் காழ்ப்பு அடைதல் தவறா?

66

கண்ணுடையர் என்போர் கற்றோர்; முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்" என்று முறையுரைக்கும் மன்பதை கண்ணினைப் பெற்றிருந்தும் புண்ணாக்கித் திரிவோரைக் கண்டும் போற்றிப் புகழுமா?

போற்றும் உரிமையுடைய மன்பதைக்குத் தூற்றும் உரிமை மட்டும் இல்லாமல் எப்படிப் போகும்? போற்றுதற்குரியவற்றில் ஒதுங்கி நின்று விட்டுத் தூற்றுதற்கு மட்டும் 'நான்' என்று முன் வந்து நிற்கும் பிழைபட்டோர் மலிந்த நாட்டில்-மலிந்த நாளில்—தூற்ற வேண்டிய ஒன்றைத் தூற்றாமல் இருத்தலை எதிர் நோக்க முடியுமா?

அப்படியானால் கற்றவர்களிடமிருந்து மன்பதை எவற்றை எதிர்பார்க்கிறது?

கற்றவர்களிடமிருந்து மன்பதை எத்துணை எத்துணையோ காரியங்களை எதிர்நோக்குகின்றது. அவற்றுள் எல்லாம் ஒன்றே ஒன்றை மிக எதிர்நோக்குகின்றது. அந்த ஒன்றும் கற்றோரிடம்