உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

67

அமைந்துவிட்டால் மற்ற எல்லாமும் உடன்வரும் என்று திண்ணிதாய் நம்புகிறது. அதுவும் உண்மையே! இளவேனில் வரவும், தென்றல், வருதலும், குயில் கூவுதலும், தேமா தளிர்த்தலும் தொடர்ந்து நிகழ்வது இல்லையா?

அந்த ஒன்று எது?

66

'உலகம் எவ்வாறு நடக்கிறது என்பதைப் பின் பற்றி நடத்தல் வேண்டும்' என்பதே.

உலகம் என்பது என்ன? உயர்ந்தோர் பெரியோர், வழி காட்டுவோர் ஆயோர்களே உலகம். பெரியோர்களே உலக வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் காரணமானவர்கள். அவர்கள் நடைமுறையே உலக நடைமுறை; அவர்களைப் பின்பற்றிச் செல்வதே கற்றோர் கடமை; கல்விப் பயன்!

நடந்து காட்டுதல் அரிது; அதனினும் அரிது நடக்கவேண்டிய நெறிகளை நடைமுறையால் கண்டு நெறிப்படுத்துவது! நடப்பதையும், வண்டி ஓட்டிச் செல்வதையும் விட, சாலைக்கு வரைப்படம் தயாரிப்பதும், சாலையமைப்பதும் அரிய செயல்கள் அல்லவா!

செவ்விய சாலை அமைந்தபின் எளிதாய் இனிதாய் நடக்க வாய்ப்பு இருந்தும் எத்தனைப்பேர் சாலை ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்? இது போல் அறநெறியை அரும்பாடு பட்டு வகுத்தும்; நடந்து வழி காட்டியும் சென்றோர் இருக்க அவர்கள் காட்டிய வழிச் செல்வதில் எத்தனைத் தவறுகள்; முறைகேடுகள்?

வள்ளுவர் சொல்வார்: "உயர்ந்தோர்கள் எப்படி வாழ் கிறார்களோ அப்படி வாழ்பவர்களே அறிவுடையர்;” “நல்ல பல நூல்களைக் கற்றறிந்தாலும் உலகத்தோடு ஒட்ட ஒழுகுதலைக் கற்காதவர்கள் அறிவில்லாதவரே."

பெற்றிருக்கும் பட்டங்களைக் கொண்டு மதிக்கும் இந் நாளையிலே ஒருவன் ஒழுகுமுறை கொண்டு மதிப்பிடுதல் கூடுமா? என்னும் வினா எழும்; எழுதலும் வேண்டும்.

பட்டத்தை மதிக்க வேண்டும்; அறிவுடைமை காரணத்தால் பெற்றது ஆகலின். அனால் பெற்ற பட்டத்தின் பயன் என்ன? பயனில்லாப் பட்டம், சிறார்பட்டம், தம்பட்டம் என்று விடுக!