உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. குடிகேடன்

அளவிறந்து சுவைநீர் குடித்துக் கெடுபவன் குடிகேடன்! புகை வகைகளைக் குடித்துக் கெடுபவன் குடிகேடன்!

மது வகைகளைக் குடித்துக் கெடுபவனும் குடிகேடன்! எந்த ஒரு முயற்சியும் கொள்ளாமல் இருந்து குடியைக் கெடுப்பவன் குடிகேடன்!

குடியை எந்த வழியில் ஆயினும் சரி கெடுப்பவன் எல்லாம் குடிகேடனே!

தன்னைக் கெடுத்துக் கொள்வது தவறு; குடியைக் கெடுப்பது தகுமா?

தன்னைக் கெடுப்பது எவ்வாறு தவறாகும்? பிறரைக் கெடுத்தால் அல்லவோ தவறு, என எண்ணலாம்!

பிறர் உழைப்பால் உண்டு, பிறர் உழைப்பால் குடித்து, பிறர் உழைப்பால் உடுத்து, பிறர் உழைப்பால் உறைந்து, பிறர் உழைப்பால் இன்பப் பொழுது போக்கி, பிறர் உழைப்பால் டப்பட்டோ, சுடப்பட்டோ ஒழியும் ஒருவன் தனக்குப் பல வகைகளாலும் உதவிய சமுதாயத்திற்கு எந்த ஒரு சிற்றுதவியும் செய்யாது போனால் - சமுதாயம் செய்த உதவி அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர்தானே! கடமை உணர்ச்சி உடையவன் தன்னைப் பேணிக் காத்த சமுதாயத்திற்கு உதவாமல் சாவானா? உதவிய சமுதாயத்திற்குப் பதில் உதவாததுடன் கேடும் செய்து விட்டுப் போனால்?...

மாட்டை வளர்க்கிறோம்-பால் முதலாம் பயன் பெறுகின்றோம்.

ஆட்டைக் காக்கிறோம்-பணப்பேறு பெற்று மகிழ்கிறோம்.

நாயை வளர்க்கிறோம்-நன்றியும் காவலும் கைவரப் பெற்று இன்புறுகிறோம்.