உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

105

கீழிறங்கி விட்டவர்களே ஆவர்! உலக நலம் நாடும் செயலைத் தந்நலத்தால் மறைத்து விட்டார்களல்லவா!

சீதை இலங்கையில் அரக்கியர்கள் இடையே நைந்திருந்து துன்புற்றாள். அத்துன்பினை நினைக்கும் காவியக் கம்பனுக்கு மருந்தே முந்தி நிற்கின்றது. பாறைகளின் நெருக்கலுக்கு ஆட்பட்டு, மழைத்துளி வரக் காணாத மருந்து மரம் போலத் துன்புற்றாள் என்கிறான். பாறைகளாக அரக்கியர் உளர்; மழைத் துளியாக இராமன் உளான்; மருந்து மரமாகச் சீதை உளாள்! இவ்வுவமையில் நோக்கத்தக்கது என்ன? உலகுக்குப் பயன்படும் மருந்து, ஏதுமின்றி வறண்டு கிடக்கின்றது என்பதே.

ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் என்பவன் ஈதலும் இசைபட வாழ்தலும் பொருளெனக் கொண்ட பெருவள்ளியோன். அவன் தன்னிடம் இரந்து வந்தவர்க்கு இல்லை என்னாது எல்லையின்றி ஈந்தான். இருக்கும் பொருள் அனைத்தும் கொடுத்துத் தீர, இன்னும் இரப்பவர் பெருகினர். என்