21. மருந்து மரம்
மருந்தை நினைக்கும் பொழுது மனத்தைக் குமட்டுவது உண்மைதான் ; வாந்தியெடுப்பதும் மெய்தான்; எப்படி இருந்தாலும் அதனைப் போற்றாமல் இல்லை; அதன் அணைப்புக்கு ஆட் படாது இருப்பதும் இல்லை.
மருந்து, கசப்பு மிக்கது ஆகலாம்; கொதிப்பு மிக்கது ஆகலாம்; நாடி நரம்புகளிலெல்லாம் புகுந்து அதிர்ச்சியூட்டலாம். இருந்தாலும் அதன், பின் விளைவை எண்ணிப் புறக்கணிக்காமல் போற்றித்தான் ஆகவேண்டும், நோயாளர் மட்டும் அன்றி நோய் இல்லாரும்! என்றேனும் ஒருநாள் நோயர் ஆகலாம் அல்லவா!
மருந்தின் நலம் அறிந்த பெரியோர்கள் மருந்து 'அமிழ்து போன்றது' என்றனர். முன் கைத்துப் பின் இனிக்கும் ஆன்றோர் சொல் போல்வது மருந்து என்றனர். உடன் பிறந்தே கொல்லும் நோயை, ஒன்றாத குன்றின்மேல் நின்றிருந்தும் தீர்க்கும் தன்மையது என்றனர். உயர்ந்தோர் உரைமணிகளை, "மருந்தினும் இனிய கேள்வி” என்று பெருமைப்படுத்திக் காட்டினர்.
மருந்து கொடுத்தவர் மருத்துவர் ஆனார்; மருத்துவர் தொழில் மருத்துவம் ஆயிற்று; அவர் மருந்து கொடுக்கும் இடம் மருத்துவமனை ஆயிற்று ; மருந்துச் செடிகளைத் தேடுவதும், தேடிப் பொடி செய்வதும், சாறு இறக்கிப் பதம்படுத்துவதும் புலமையாளர்களால் போற்றப்பெற்று உலக நலங் கருதிய தொண்டு ஆயிற்று.
ய
காய்ச்சல் கண்டோன் ஒருவன், அவனுக்கு உரிய மருந்தை அவனே கண்டு பிடித்துத்தான் நோயைத் தீர்க்க வேண்டுமானால், அவன் உடல், உயிரை அதுவரை தாங்கி நிற்குமா? ஆனால், இன்னபடி வெதுப்பு இருந்தால் ன்ன மருந்தை இன்ன அளவில் இன்ன முறையில் தருக என்று எழுதி வைத்தும், பழக்கி வைத்தும் சென்ற பெரியோர்கள் தொண்டு உலக நலங்கனிந்த தொண்டாம்! தாம் கண்ட மருந்தைத் தம் சவக் குழியுடன் மறைத்து வைத்துப் பிறர் அறியா வண்ணம் செய்தவர்கள் அறிவுடைமையால் பெரியர் எனினும், பண்புடைமையால் மிகக்