இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருக்குறள் கட்டுரைகள்
“தீயவே தீய பயத்தலால் தீயவே
தீயினும் அஞ்சப் படும்"
103
என்று தான் வள்ளுவர் பேசியிருப்பார் என எழுதுகிறார் பெரும் புலவர் அரசஞ் சண்முகனார். ஏனெனில், ‘தீயவே தீய பயக்கும்' 'தீ' தீமை அன்றி நன்மையும் பயக்கும். அதனால், தீயவே என தெளிவு கருதி இடப் பெறல் வேண்டும்; ‘யானே கள்வன்' என்று முடிவுரைக்கவில்லையா பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். வள்ளுவருக்குச் சிறப்பளிக்கும் உண்மை மாற்றங்களை ஏற்றுக்கொள்வதால் குற்றமில்லையே!