114
ஏன் வராது!
இளங்குமரனார் தமிழ்வளம்
—
9
பொருளைச் சூதிலே தொலைத்தால், கள்ளிலே கவித்தால், ஆடம்பரச் செயல்களில் அழித்தால் ஆடாத ஆட்டம் ஆடினான்; கெட்டான் எனப் பசிப் பழிக்கும் உலகம். ஆனால் பள்ளிக்கூடம் தோற்றுவிப்பதிலே, மருத்துவமனை கட்டுவதிலே, ஊர்க்கிணறு தோண்டுவதிலே வாசக சாலை, நூலகம் நிறுவுவதிலே வறியார்க்கு உதவுவதிலே ஒருவன் வறுமையுற்றால் எவரேனும் “செய்யத் தகாதன செய்தான்; கெட்டான்" என்பரோ? என்பார் உளராயின், அவரைப் போலும் கொடியவர் முன்னும் இல்லை; பின்னும் இல்லை என்றுதான் கூறவேண்டும். அல்லது வள்ளுவர் அறைவது போல் கொடுப்பதைத் தடுக்க நினைக்கும் கொடியோன் குடும்பத்துடன் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடுவான் என்று ‘சாபம்’ போடவேண்டும்.
இனிப் புகழ்வரும் இறப்பு உண்டா?
ஏன் இல்லை!
ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் மறைவு புகழுக்குரியதா? பழிக்குரியா? கணைக்கால் இரும்பொறையும், பிசிராந்தையாரும் கபிலரும் மானத்திற்காகவும் உயிரோடு உயிரான நட்புக்காகவும் உயிர் துறந்தது புகழுக்குரியவா? பழிக்குரியவா? இ வை பழிக்குரிய சாவுகள் என்றால் அவர்களுக்காக 'அந்தோ' என இரங்கல் தெரிவிக்க வேண்டியதுதான்! ஏன்? பழிவாழ்வு வாழ்கிறார்கள் அல்லவா!
புகழ் வளரும் வறுமையும், சாவும் எவருக்குக் கிடைக்கும்? ஆன்று அவிந்து அடங்கிய சான்றோர்க்குக் கிடைக்கும்; எளிதிலும் கிடைக்கும்; பிறருக்குத் தான் அரிது.
“நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.”