உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருக்குறள் கட்டுரைகள்

113

அது பற்றிக் கவலையில்லை. புகழே வேண்டும்" என்னும். வளிப்படையாகக் கண்காண மலை தோன்றலாம்; பல்லாயிரம் அடிகளுக்குக் கீழே வைரமும் தங்கமும் ஆழ்ந்து கிடக்கலாம். ஆழத்தில் கிடக்கிறது என்பதற்காக வெளிப் படையாக நிற்கும் மலைக்கல்லை மதிக்க முடியுமா வைரத்தினும்? அதன் அருமையை நோக்க வேண்டாமா?" என்று சான்று காட்டித் தெளிவு படுத்தும்.

வாழ்வு என்பது என்ன? மன நிறைவே வாழ்வு! போதும் என்ற மனமே பொன்! வறுமை என்பது என்ன? இது இல்லையே என்று ஏங்கும் ஏக்கமே வறுமை! ஆசையே துன்பம்-வறுமை!

66

'வசை ஒழிய வாழும் வாழ்வே உயிர் வாழ்வு" என்று உண்மை உரைத்தார் வள்ளுவர்; அவரே இசை ஒழிய வாழ்பவரே (பழியுடன் வாழ்பவரே) இறந்தவர் என்ற மெய்ம்மை மொழிந்தார்.

வாழ்வும் அடையலாம்; வறுமையும் அடையலாம்— எந்தவொரு கேடும் இல்லை; நன்மையும் இல்லை. பிறக்கலாம், இறக்கலாம்- இவையும் அத்தகையவே. பெற்றது புகழா, பழியா? என்பதே எடைபோட்டுக் காணவேண்டிய பொருள். நல்லோர் வாழ்வு போற்றப்படுகிறது;

நல்லோர் வறுமை மிகப் போற்றப்படுகிறது;

தீயோர் வாழ்வு பழிக்கப்படுகிறது;

தீயோர் வறுமை மிகப் பழிக்கப்படுகிறது.

நல்லோர் மறைவு உலகோர் நெஞ்சை அசைக்கிறது.

தீயோர் மறைவு உள்ளத்தைத் தொடுவதே இல்லை. உலகியல் இவ்வாறு அமைவது ஏன்?

வாழ்வும் வறுமையும், பிறப்பும் இறப்பும் உலகப் பொது; எல்லோர்க்கும் உரிமைப் பொருள்; எவராலும் நீக்குதற்கு அரியது; பிறப்புடன் நிழல்போல் தொடர்ந்து நிலைப்பது. இவற்றை அறிவுடைய பண்புடைய மாந்தர் வென்று 'நிமிர்ந்த நடை' போடுகிறாரா இல்லையா? இவர்கள் வரலாறு நமக்கு என்ன காட்டுகின்றது?

“புகழ் வளர்வதற்குக் காரணமான வறுமையைப் பெறவேண்டும் புகழ் வளர்வதற்குக் காரணமான சாவினைப் பெறவேண்டும்”

வறுமையால் புகழ் வருமா?