112
9
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
அறத்திற்குக் கண்ணில்லையா” என்று பழிக்கிறோம்; "பட்டப் பகலிலே கொள்ளையடித்து வாழும் இப்பாவி கோடீசுவரன் ஆகி விட்டானே; இருள் கவ்வி விட்டதா நாடு ஆள்வோரை” என்று துடிக்கிறோம். இதே போல், "கோடி கிடைத்தாலும் சொன்ன சொல் மாறாத நாநயம் உடைய இவனுக்கோ இவ்வறுமை; “வஞ்சம் சூது அறியாத இவனுக்கோ இவ்வளவு அல்லல்;" "கொடையும் தயையும் பிறவிக்குணமாகக் கொண்ட இவனுக்கோ இக் கொடுந் தாழ்வு;” “பிறர் பொருளுக்கு எள் அளவும் விரும்பாமல் வாழ்ந்த இந்நல்லோனுக்கோ இப் பேரிழப்பு" என்று பேசுகிறோம். முன்னவன் வாழ்வை வெறுக்கும் அளவினும் பன்னூறு மடங்கு பின்னவன் வறுமைக்கு வருந்து கின்றோம்; அழுகின்றோம்; அரற்றுகின்றோம்.
முன்னவன் செல்வத்தைத் திரட்டி மலைபோல் குவித்து வைத்திருக்கலாம்; பின்னவன் வறுமைப் படுகுழியில் ஆழ்ந்து கிடக்கலாம். என்றாலும் எவனுக்குப்பழி? எவனுக்குப் புகழ்? எவன் கால்படும் தூசியாகின்றான்? எவன் தலைமேல் சூடும் மணிமுடியாகின்றான்?
முன்னவன் செல்வம் பழிவளர்வதற்கு ஏதுவானது. பழிச் செல்வம் சீரியதா? புகழ்வறுமை சீரியதா? என்று பண்பிலா உலகில்-பண உலகில்-கேட்டால்-பழி வருகிறதா புகழ் வருகிறதா கவலையில்லை— பணம் வருகிறதா அது போதும்; நாய்விற்ற காசு குரைக்கவா செய்யும்; நரகலில் கிடந்த காசு நாறவா செய்யும் என்று பதில் கூறும். ஆனால் அறன் உணர்ந்த சான்றாண்மை உலகில் கேட்டால் "வறுமையோ வாழ்வோ
தருமப் பள்ளிக்கூடம்
முகில்-