உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

று

ஆடையும் வீடும் போதும் எனக் கருதுகின்றனனோ? இல்லை! இத்தகையனும் 'போதும்' என்று சொல்வதும், 'வேண்டாம்; முடியாது என மறுப்பதும் உணவு ஒன்றற்கே! ஆதலால் உளம் நிறையப் போதும் என்னும் பொருள் உண்டியே ஆதலின் ‘அன்ன தானத்திற்கு இணை என்ன தானமும் இல்லை' என்னும் வழங்குமொழி ஏற்பட்டு விட்டது.

முற்றுந் துறந்த முழுமணியாகத் திகழ்ந்த மணிமேகலையார் செய்த அறச் செயல்களை அறியார்யாரே? சிறைக் கோட்டத்தையே அறக்கோட்டம் ஆக்கிய செந்தண்மைச் செல்வி அவரே யல்லரோ? "காணார் கேளார் கால்முடம் பட்டோர், பேணுதல் இல்லார் பிணிநடுக் குற்றோர்