170
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
எத்தனையோ செத்து மிதப்பதைப் பார்த்துக் கொண்டும் தானும் அவ்வழியிலேயே நிலைத்துவிடும். அறிவிலாத அதற்கு அது தகுதியாகலாம்; அறிவுடைய - ஏன் - ஆறறிவுடைய மனிதனும் பதனீர்ப் பூச்சிக்கு மூத்த பூச்சியாக இருக்கலாமா?
குடி' குடியைக் கெடுக்கிறது என்பதைத் தெளிவாக அறியாதவர் முன்னும் இல்லை; பின்னும் இல்லை. கெடுப்பதைக் கண்ணாரக் கண்டறிந்தும் ‘மதுவே மகேசன்’ ‘மதுவே சுவர்க்கம்’ என்று மண்டிக் கிடப்பவர்கள் எத்துணைப் பேர்கள்!
பழங்கால அரசர்களை விட்டதா சூது! சூதாடிய வேந்தர்கள் கதையை நாளெல்லாம் படிக்கிறோம். அவர்கள் சூதிலே கொண்ட பற்றால் குடியை அன்றி, நாடு நகரையும் இழந்து நலிந்ததையும், மனைவி மக்களைப் பிரிந்து மருகியதையும் அறிகிறோம்! என்றாலும் சூதாட்டம் ஒழிந்ததா? முன்னாவது ஒரு வகையில் சூதாட்டம்! இப்பொழுது நோக்குமிடமெங்கும் நீக்கமறச் சூதாட்டம் - பெயர் மட்டும் வெவ்வேறு! குதிரைப் பந்தயம், குறுக்கெழுத்துப் போட்டி, பரிசுத் திட்டம், குலுக்குச் சீட்டு, தரகுக்குடை, கள்ள வியாபாரம், பெண் மாப்பிள்ளை ஒப்பந்தம், கட்சிக் கூச்சல், அரசியல் - இப்படி எல்லாம் எல்லாம்! சூதாட்டம் ஒரு பங்கு மறைமுகச் சூதாட்டம் நூறு பங்கு! உண்மைச் சூதாட்டச் சங்கத்திற்கே வெட்கமின்றிப் படித்தவனும், பட்டம் பெற்றவனும், பேச்சாளியும், எழுத்தாளியும், அறிஞனும், கலைஞனும் வாணாள் உறுப்பினன் ஆகின்றான்! வெட்கம்! வெட்கம்! சூதாடி! ஒரு நாளும் திருந்தி மனிதனாக வாழாத வாழ்நாள் சூதாடி! - என்று முத்திரை வைத்துக் கொண்டு செத்துமடிய வேண்டும் என்றால் அவர்கள் நிலைமைக்கு இணை அவர்கள் நிலைமைதான்!
66
-
மது விற்காதே; மது குடிக்காதே; சூது ஆடாதே;" என்று அரசு தடை விதித்திருக்கிறது. ஒரு பக்கம் அனுமதியும் வழங்கி இருக்கிறது அனுமதி பெற்றவர்களைக் கண்டு அனுமதி பெற முடியாத குடியர்களும், சூதர்களும் ஆத்திரம் கொள்கின்றனர். தங்களுக்கு அனுமதி இல்லாமல் சிலருக்கு அனுமதி வழங்கும் கொடுமையைக் குடியாட்சிக் காலத்தில் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை போல் இருக்கிறது. பெறாத ஒன்றைப் பெற வழியென்ன? கை கண்டது கரவு வழி ஒன்றே. மறைந்து மறைந்து குடிக்கின்றனர். சூதாடுகின்றனர்.
-
இவற்றால் இயற்கையாக ஏற்படும் உடற்கேடு, பொருட்கேடு ஒரு பக்கம் இருக்க, ஓரோர் வேளை ஊர் காவலர் கைகளில்