திருக்குறள் கட்டுரைகள்
169
நொடிப் பொழுதில் முடிவு கட்டிவிடவும் முடியாது! வாழ்ந்து பார்க்க வேண்டும்; காலம் பொறுத்திருந்தும் முடிவு காண வேண்டும்! செயற்கைச் சட்டம் எப்பொழுதும், உடனே வெளிப் பட்டு விடும். ஆனால் இயற்கைச் சட்டமோ பொறுத்திருந்து தான் தன் ஆற்றலைக் காட்டும். செயற்கைச் சட்டத்தின் விளைவுகளில் தவறுகள் நேரலாம். இயற்கைச் சட்டத்தில் அவ்வாறு ஒரு நாளும் நேர்வது இல்லை! காரணம் செயற்கைச் சட்டம் அறிவின் ஆட்சி மிக்கது; இயற்கைச் சட்டம் அறத்தின் ஆட்சி மிக்கது. இதனை தெளிவுறக் காண்பவன் மெய்யுணர்வு பெற்றவன்! துன்ப இன்பங்களுக்கு அப்பாற்பட்டவன்!
துன்ப இன்பங்களை நாமே உண்டாக்கிக் கொள்கிறோம்! எப்படி?
சிலர் வெற்றிலை பாக்குப் போடுகிறார்கள்; சிலர் புகையிலையும் சேர்த்துக் கொள்ளுகிறார்கள்; இன்னும் சிலர் பொடியையும் கூட்டிக் கொள்கிறார்கள்; வேறு சிலர் 'சிகரெட்டு, சுருட்டு, பீடி' என்னும் புகைகளில் புதைந்து கொள்ளுகிறார்கள். இத்தகையவர்களுக்கு இவர்கள் பயன்படுத்தும் இப் பொருள்கள் கிடைக்காவிட்டால் ஏற்படும் துன்பத்தைக் கண்ணாரக் காண வேண்டும்! “எவ்வளவு அற்பமான பொருள்கள் இவை? இவற்றைப் பெற முடியாமைக்கு இவர்கள் பயன்படுத்தும் இப்பொருள்கள் கிடைக்காவிட்டால் ஏற்படும் துன்பத்தைக் கண்ணாரக் காண வேண்டும்! “எவ்வளவு அற்பமான பொருள்கள் இவை? இவற்றைப் பெற முடியாமைக்கு இவர்கள் படும் அல்லல்கள் இவ்வளவு அவ்வளவா?" என்று அவர்கள் நிலைமைக்காக வருந்தாமல் முடியாது.
"இப்பொருள் இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது. அப்படிப் பழகிவிட்டேன்" என்று பெருமைப்பட்டுக் கொள் பவர்களும் இருக்கிறார்கள். சாப்பாடு இல்லாமல் கூட இருந்து விடுவேன் - வெற்றிலை போடாமல், புகை பிடிக்காமல் என்னால் இருக்க முடியாது என்றும் தங்கள் தகுதியை எடைபோட்டு இன்புறுகிறார்கள். இவர்கள் உரை இவர்களுக்குப் பெருமை தருகிறதா? என்பது ஒரு பக்கம் இருந்தாலும், நன்மையாவது தருகிறதா? என்றால் அதுவும் இல்லை! பதனீர்ப் புழு என ஒன்று உண்டு. அதற்கு அளவும் கிடையாது; அறிவும் கிடையாது என்று சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. பதனீர்ப் புழு, பதனீர்ச் சட்டிக்குள் புகும்; வெளியேறாது. குடித்துக் குடித்து வயிறு புடைத்து வெளியேறா வண்ணம் அங்கேயே சாகும்!