உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. ஆசை அறுமின்கள்

மனித வாழ்வு பலப்பல துன்பங்களுக்கு இ டனாக இருக்கிறது. துன்பத்திற்கு உறைவிடமே மனித வாழ்வு என்று கருதுபவர்களும் இல்லாமல் இல்லை. 'வாழ்வு இன்பந்தான்' என்று 'பேயாட்டம்' ஆடி, எல்லாம் போனபின் 'வாழ்வே சாக்காட்டுச் சதிராட்டம்' என்று நொடிதோறும் ஏங்கி மடிபவர்களும் இல்லாமல் இல்லை! 'வாழ்வு' துன்பமானது தானா? துன்பமே உருவானது தானா?

இவற்றுக்கு விடை காண வேண்டுமாயின் துன்பத்தைப் பற்றி ஓரளவு அறிதல் வேண்டும். துன்பம் எவரையும் தானே தேடி வருவது இல்லை. துன்பத்தை நாமே தேடிக் கொள்கிறோம்! இது 'இல்லை' என்ற ஏக்கம் எங்கு எங்கு ஏற்படுகின்றதோ அங்கு அங்கு எல்லாம் துன்பம் தலைகாட்டுகிறது; தங்கியும் விடுகிறது. இது வேண்டும் இது வேண்டும் என்று தேடி அலைந்தால் துன்பம்; இது வேண்டாம் இது வேண்டாம் என்று ஒதுங்கினால் ஒதுக்கினால் -இன்பம்! பேராசிரியர் உரைக்கின்றார், வறுமை என்பதற்கு ஓர் விளக்கம்! அனுபவிக்க இது கிடைக்கவில்லையே என்று கருதிக்கிடக்கும் பேராசையுள்ளமே வறுமை என்பது அவர் தெளிவுரை. ஒன்றை விரும்பிச் சென்றால் துன்பம்; வெறுத்து ஒதுக்கினால் இன்பம்! துன்ப இன்பங்களுக்கு யார் காரணம்?

இதனைத் தெளிவாக ஆராய்ந்த பெரியார் கணியன் பூங்குன்றன். அவர் கணக்கியல் மேதை; அன்றியும் வாழ்வியல் மேதை; வாழ்வியல் யாது? 'மெய்யுணர்வு எய்தித் தெளிவுடன் வாழ்பவரே வாழ்பவர்! வாழ்வதே - வாழ்வியல்! பிறரெல்லாம் தாழ்பவர் அவர்கள் இயலெல்லாம் தாழ்வியல்!

"தீதும் நன்றும் பிறர்கொடுக்க நமக்கு வருவன இல்லை; நாமே நமக்குத் தேடிக் கொண்டன; து போலவே, துன் புறுதலும் இன்புறுதலும் பிறர் தந்து நமக்கு வருவன இல்லை; நாமே தேடிக் கொண்டனவே என்கிறார். இவர் உரை பொய்யா மெய்யா என்பதைப் பேசித் தீர்த்து விட முடியாது;

55