திருக்குறள் கட்டுரைகள்
தெய்வப் புலவர் திருவள்ளுவர்
209
வள்ளுவர் தம் புலமைத் திறத்தால் திருவள்ளுவர் ஆனார். அவர் ஆக்கிய குறளும் திருக்குறள் ஆயிற்று. இத்தகைய அளவில் சிறப்புத் தருவதும் கூட ஒருவருக்கு மன நிறைவு அளிக்கவில்லை. அவருக்குத் தெய்வப் புலவராகவே திருவள்ளுவர் காட்சியளிக்கிறார். அவரைத் தெய்வப் புலவர் என்றே பிறர் அழைக்கவேண்டும் என்று தணியா வேட்கை கொள்கிறார். அவ்வேட்கையால் கூறுகிறார்; "தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிறப்பை அறியாமல் 'வள்ளுவப் புலவர் திருவள்ளுவர் சிறப்பை அறியாமல் வள்ளுவன் என்பவன்' அறவே அறிவில்லாதவன் ஆவான். அவன் சொற்களை அறிவு ஆராய்வு உடையவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்*
அறம்பொருள் இன்பம்வீ டென்னும்அந் நான்கின் திறம் தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும் வள்ளுவன் என்பானோர் பேதை அவன் வாய்ச்சொற் கொள்ளார் அறிவுடை யார்
இவ்வரிய பாடலைப் பாடிய பெருமகனார் மாமூலனார்.
பா என்பது வள்ளுவர் வெண்பா
பாக்களுள் முதன்மையும் சீர்மையும் உடையது வெண்பா. என்றாலும் வெண்பாக்கள் அனைத்தும் சிறப்புற்றனவோ? இடைக்காலத்தில் வெண்பாவில் புகழேந்தி' என்று நளவெண்பா இயற்றிய புலவர் பெருமகனார் போற்றப்பெற்றது போல் பிறிதொருவர் போற்றப்பெற்றுள்ளாரோ? இல்லையே! இதேபோல்,பழங்காலத்தில் பா என்றால் வெண்பாவே முன்னின்றது. வெண்பாவுள்ளும் வள்ளுவனார் அருளிய குறள் வெண்பாவே முந்தி நின்றது. இதனைப் "பாவிற்கு வள்ளுவர் வெண்பா" என்று பகர்கிறார் கவிசாகரப் பெருந்தேவனார்.
தெளிவும் விரிவும்
வள்ளுவர் பா புலவர்கள் உள்ளத்தைத் தொட்டிருந்த காரணத்தால்தான் இவ்வாறு சிறப்புப்பேசினர். கேட்பவர்க்கு நன்கு விளங்குவதே, சொல்பவரின் வெற்றிக்கு அறிகுறி அவ் வெற்றியைத் திருவள்ளுவர் எளிதில் என்தினார். "எப்பொருளும் எவரும் எளிதில் முறையாக அறியுமாறு கூறிய வள்ளுவருக்கு நிகரொருவர் உண்டோ?" என்று வினவுகிறார். பாரதம் பாடிய