உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

பொதுவான

66

மறைமலையம் - 23

புறச்சான்று ஏதுங் காண்கிலேம். இனி,

66

அவரியற்றிய 'திருவாய்மொழி' முதலியவற்றில், அவர் பிறந்தபொழுதே பாலுண்ணாது தவத்திலிருந்து எல்லாம் ஓதாதுணர்ந்தமைக்குக் குறிப்பு ஏதேனும் உளதோ வெனின் அதனையுங் காண்கிலேம். மற்றை மக்களைப் போலவே, தாமும் யாக்கைவழி யுழன்று நோயானும் இருவினைகளானும் வருந்தும் ஓருயிராகவே தம்மைப் பல்காலுங் குறிக்கின்றார். "முந்நீர்ஞாலம் என்னும் பதிகத்தில், ஆக்கையின் வழியுழல்வேன், வெந்நாள் நோய்வீய வினைகளை வேரறப் பாய்ந்து, எந்நாள் யான் உன்னை இனிவந்து கூடுவெனே, “பன்மா மாயப் பல்பிறவியிற் படிகின்ற யான், தொன்மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து, நின்மா தாள்சேர்ந்து நிற்ப தெஞ்ஞான்று கொலோ” என்றற் றொடக்கத்து அவர் மொழிகள் அவரைப் பொதுமக்களுள் ஒருவராகவே வைத்து உரைப்பக் காண்கின்றோம். இம் மக்கட்டன்மையின் வேறாக அவருக்குக் கடவுட்டன்மையும் உண்டென்பதற்கு ஏதொரு சான்றும் அவரியற்றிய பாடல்களினுங் காணாமையின், அகச்சான்றும் இன்றாம். புறச்சான்று அகச்சான்று இரண்டுமில்லா இக்கதையை அவர்பால் மிகுதியும் பற்று வைத்த ஒரு வைணவப் புலவர் நம்மாழ்வாரைச் சைவசமயா சிரியராகிய திருஞானசம்பந்தரினும் மேம்பட்டவராகக் கூறவிழைந்து அங்ஙனம் ஒரு பொய்க்கதை கட்டிவிட்டாரென்க. யாங்ஙன மெனின், திருஞானசம்பந்தர் மூன்றாண்டுள்ள சி றுகுழவியா யிருந்த காலத்து இறைவனும் றைவனும் இறைவியும் அவரெதிரே தோன்றி, அவருக்குத் தமது அருட்பாலை ஊட்ட, அஃதுண்ட அவர் எல்லாம் வல்ல ஆசிரியராய் எல்லாம் ஓதாதுணர்ந்து அருள் துளும்புஞ் செந்தமிழ்த் திருப்பாட்டு களைச் சென்றசென்ற திருக்கோயில்கடோறும் அருளிச்செய்தா ரன்னும் வரலாற்றுக்கு எதிராக, அவரினும் மிக்கதொரு மேன்மையை நம்மாழ்வாருக்குக் கூறல்வேண்டியே அவ் வைணவப் புலவர் 'நம்மாழ்வார் பிறந்த ஞான்றுதொட்டே பாலுமுண்ணாது தவத்திலிருந்து திருவாய்மொழி அருளிச் செய்தார் என்று கதை கட்டினாராதல் வேண்டும். திருஞான சம்பந்தர் பாலுண்டு பாடினாரென்றால், நம்மாழ்வார் பாலுமுண்ணாது பாடினாரென்பது கழிபெரு மேன்மையா மென அப் புலவர் நினைத்தார் போலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/139&oldid=1588567" இலிருந்து மீள்விக்கப்பட்டது