உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

L

129

யுடையவராகவும், அவர் அருளிய பாடல்களை உண்மை யறிவுரைகளாகவுங் கோடலில் இழுக்கொன்று மில்லை. ஏனெனில், இறைவனது முழுமுதற் றன்மையைச் சிற்றறிவுடைய மக்களுக்கு அறிவித்தற் பொருட்டுப், பேரறிவுடைய பெரியார் எந்நாட்டிலும் எவ்வினத்திலும் எம்மதத்திலும் பிறத்தல் உண்டு. ஆனாலும், இங்கே யாம் ஆராய்தற்கு எடுத்துக்கொண்ட நம்மாழ்வார் பிறந்த நாள்தொட்டே எல்லாம் ஓதாதுணருங் கடவுட்டன்மை உடை ன்மை உடையவர்தாமா என்பதற்கு ஏற்ற சான்றுகள் காணினன்றி, அவரை அவ்வாறுகொண்டு, அவருரையினை மெய்யெனத் தழீஇ யொழுகல் உலகிற்குப் பெரிதுந் தீங்கு பயப்பதொன்றாம். அவரைப் பற்றிப் பின்னுள்ளோர் எழுதிவைத்த இக்கதை ஒன்றனையே கொண்டு அவரை அங்ஙனங் கடவுட்டன்மை யுடையராகக் கருதுதல் வழுவாம்; என்னை? ஒருவர்பால் அளவுகடந்த பற்றுவைத் தோர் அவரைக் கடவுளாக உயர்த்துப் பேசுதலும், ஒருவர்பாற் பெரும் பகைமை காண்டோர் அவரை இழிந்த விலங்கினுங் கடைப்பட்டவராக இழித்துப் பேசுதலுங் கண்டாமாகலின், ஒருவர்பாற் பற்று வைத்தோரும் பகைமை கொண்டோருங் கூறும் மெய்யல்லா உரைகளை மெய்யென நம்பி அவரை உயர்ந்தா ரென்றேனும் இழிந்தாரென்றேனும் முடிவுகட்டல் நடுவுநிலை யுடையார்க்கு இசையாதாகலின் என்க. அற்றேல், நம்மாழ்வாரின் உண்மைத் தன்மைகள்; தெளிதற்குச் சான்றாகற்பாலன யாவையெனிற்; சான்றுகள் புறச்சான்றும் அகச்சான்றும் என இருபாலனவாம்: அவற்றுட் ‘புறச்சான்று’ என்பன பற்றும் பகைமையும் இல்லா நடுநிலையாளர் கூறும் மெய்யுரைகள்: இம் மெய்யுரைகளோடு ஒக்கும் வழியும் ண்மையொடு மாறுபடா வழியும் பற்றுடையோரும் பகைமையுடை யோருங் கூறுவனவுந் தழுவற்பாலனவே யாகும். இனி, 'அகச்சான்று' என்பன, ஓர் ஆசிரியன் தான் இயற்றிய நூல்களில் தன் குறிப்பின்றியே தன் வரலாற்றினையும், தன் இயற்கையினையுங் கூறிவைப்ப, அவைதாம் அறிவுடை யோரால் ஆராய்ந்தெடுக்கப்பட்டு அவ்வாசிரியர் வரலாற்றுந் தன்மையுந் துணிதற்குச் சான்றாய் நிற்பனவாகும். இவ் விருவகைச் சான்றுகளுள் நம்மாழ்வார் வரலாறு துணிதற்கு, மேலே அவர்பாற்

காட்டியபடி

பற்றுள்ளோர் எழுதிவைத்த கதையைத் தவிர

வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/138&oldid=1588566" இலிருந்து மீள்விக்கப்பட்டது