உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

15. மாணிக்கவாசகரும் நம்மாழ்வாரும்

இனிப், பிறந்த ஞான்றை எல்லாம் ஓதாதுணர்ந்த துறவியாகிப் புளியமரத்தின் (புளியாழ்வார்) அடியிலே தவத்திலமர்ந்து, உலகம் உய்தல்வேண்டித் திருவாய் மொழி'யினை அருளிச்செய்த நம்மாழ்வார், பிறந்தபின் தாய் தந்தையரால் வளர்க்கப்பட்டு ஆசிரியனால் அறிவுறுக்கப் பட்ட பன்னூற்பொருளும் பல்லாண்டு ஓதியுணர்ந்து அரசர்க்கு அமைச்சராயிருந்த மாணிக்கவாசகர் இயற்றிய 'திருவாசகத்’ தைப் பார்த்துத் தமது 'திருவாய்மொழி'யை இயற்றியருளி னாரென்றால் பொருந்தாது; மற்றுத் 'திருவாய் மொழி'யைப் பார்த்தே மாணிக்கவாசகர் 'திருவாசகம்' இயற்றினாரென்று கோடலே பொருத்தமுடைத்து என்பது படத் ‘தமிழ்வரலாறு’ உடையார் எழுதிய பகுதி ஆராயற் பாற்று.

நம்மாழ்வார் தாயின் கருப்பையைவிட்டு இந்நிலத்தின்கட் பிறந்த நாள்முதற் பாலுண்ணாதவராகி, அழுதலுஞ் சிரித்தலு மின்றி வறிதே கிடப்பப், பெற்றோர் அக்குழவியின் நிலைகண்டு கலங்கித், திருக்குருகூரிலுள்ள திருமால் கோயிலிற் கொண்டு போய், அங்குநின்ற புளியமரத்தின் அடியிலே கிடத்த, அவர் பதினாறாண்டளவும் ஏதொரு செயலுமின்றித் தவமிருந்து, பின்னர்த் தம்பால் வந்த மதுரகவியாழ்வார் பொருட்டுத் 'திருவிருத்தம்' 'திருவாசிரியம்’ 'பெரிய திருவந்தாதி’, 'திருவாய்மொழி' முதலியவற்றை அருளிச் செய்தார் என அவர்க்குப் பன்னூறாண்டு பின்வந்த வைணவமதப் புலவர்கள் எழுதி வைத்திருக்கின்றனர். நம்மாழ்வார் பிறந்தபொழுதே பாலும் உண்ணாது பிறிதேதொரு செயலுமில்லாது பதினா றாண்டு அளவும் தவத்திலிருந்தமைக்கு மெய்ச்சான்றுகளும், அவர் எல்லாம் ஓதாதுணர்ந்து பாடினமைக்கு மெய்யடை யாளங்களும் உளவாயின், அவரைக் கடவுட்டன்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/137&oldid=1588565" இலிருந்து மீள்விக்கப்பட்டது