முன்னுரை
47
தீண்டாமை (Untouchability), அண்டாமை (Upapproachability), காணாமை (Unseeability), என முத்திறப்பட்டு விட்டது. இப்போது தீண்டாமை என்று சொல்லப்படுவது, அக்காலத்துக் காணாமையா யிருந்ததே.
இடங்கிடைத்த அளவு தம்மை உயர்த்திக்கொள்வது ஆரிய வழக்கம். இதை, பார்ப்பன வுண்டிச்சாலைகளுள், சிலவற்றில் பார்ப்பனருக்குத் தனியிடம் வகுத்தலும், சிலவற்றில் இடமே தராது உண்டிமட்டும் விற்றலும், சிலவற்றில் தீட்டென்று உண்டியும் விற்காமையும் நோக்கியுணர்க.
முற்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த களவு மணமுறையாலும், இந்தியா முழுதும் வழங்கிய தன்மணப்பு (சுயம்வர) முறையினாலும், அர்ச்சுனன் பாண்டியன் மகளை மணந்ததினாலும், பாணர்க்குத் தமிழரசரிடமிருந்த மதிப்பினாலும், அந்தணரான அப்பூதியடிகள் திருநாவுக்கரசிற்குத் தம் இனத்தாருடன் செய்த சிறந்த விருந்தினாலும். பள்ளர் பள்ளியர் என்னும் வகுப்பார், மள்ளர், மழவர், உழவர், கடையர், காராளர், கருங்களமர் என்னும் பெயர்களுடன், பண்டை நூல்களில் இழிவின்றிக் குறிக்கப்படு வதினாலும், மக்களின் குலப்பெயர் இயற்பெயருடன் கூடி வழங்குவது மிக அருகியிருந்ததினாலும், சிற்றூர்களில் இன்றும் பார்ப்பனரல்லாத பல குலத்தார் முறை செப்பிக் கொள்வதி னாலும், பண்டைத் தமிழ்நாட்டில் குலப்பிரிவினை இருந்த தில்லையென்று அறியலாம்.
பார்ப்பனருக்கு உயர்வு, கல்வி, அலுவல், அதிகாரம், இலவச ஏவல், செல்வம், குலப்பெருக்கம் முதலியன வரண வொழுக்கத்தால் விளைந்த நன்மைகளாகும்.
கொலைத்தண்டமின்மை, போர் செய்யாமை, போர்க் களத்தினின்றும் விலக்கப்படல் முதலியவற்றால் குலப் பெருக்கமும், கோயிற்றொழில், கொடைபெறல், புரோகிதம், வேள்வி, பட்டவிருத்தி முதலியவற்றால் செல்வப் பெருக்கும் பார்ப்பனருக்கு உண்டாயினவாம். 'பார்ப்பானில் ஏழையுமில்லை பறையனில் பணக்காரனுமில்லை' என்பது பழமொழி.
குலத்திற் போன்றே மதத்திலும் பிரிவினை தோன்றிற்று, கடைக்கழகத்தில் சைவர், திருமாலியர், பௌத்தர், சமணர் என்னும் பல