உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

ஒப்பியன் மொழிநூல் உழைப்பிற்குக் காலும் சிறந்த உறுப்புகள் என்பதே மேற்கூறிய அணியின் கருத்தாமாயினும், அதன் எழுத்தியற் (literal) பொருளையே உண்மையான பொருளாகப் பார்ப்பனர் கூறி வருகின்றனர்.

ராமணர் முதலிய நால்வரணத்தார்க்கும் சிறப்புப் பெயர், அணி, தொழில், ஊன்றுகோல், உரிமை, தண்டனை, புதைக்கும் திசை முதலிய பல பொருள்களையும் வெவ்வேறாகவே மனு தருமங் கூறுகின்றது.

தமிழ்நாட்டிலுள்ள

பல குலங்களும் தொழில்பற்றித் தொன்றுதொட்டு வழங்கி வருபவையே; ஆயினும், அவை கூடி யுறவாடாதபடி செய்தது ஆரிய முறையாகும், இப்போது ஆதி திராவிடர் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்டோரை முதலாவது ஆரியர் மேலோரினின்றும் பிரித்ததை.

"மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே

என்னும் ம்

தொல்காப்பிய

""

நூற்பாவா

(கற்பியல் 3)

லறியலாம்.

இதில், மேலோர் என்றது அரசர், வணிகர், உழுவித்துண்ணும் உயர்ந்த வேளாளர் என்பாரை. அந்தணர் என்பார் துறவிக ளாதலின், அவர்க்குக் கரணமில்லை. தாழ்த்தப்பட்டோர் இன்றும் தாங்களே மணவினை நடத்திவருகின்றனர்.

அக்கிரகாரங்கள் உள்ளவூர்களில் தாழ்த்தப்பட்டோர் மிகக் கொடுமையாகவும் பிறவூர்களில் அவ்வளவு கொடுமையில் லாமலும் நடத்தப்பட்டு வருவதை நோக்குக.

பிறப்பால் சிறப்பு; பிரமாவே குலங்களைப் படைத்தார்; ஒவ்வொரு குலத்தாரும் தத்தம் தொழிலையே செய்தல் வேண்டும்; ஒருவன் தன் குலத்தை இப் பிறப்பில் மாற்ற முடியாது; குலங்கள் ஒன்றுக்கொன்று மேற்பட்டவை; எல்லாவற்றிலும் உயர்ந்தது பார்ப்பனக்குலம் என்பனபோன்ற கருத்துகளால், மேலோரான தமிழர் பற்பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். ஆரிய வரண வொழுக்கம் தமிழ்நாட்டிற் புகுத்தப்பட்டது.

கடைக்கழகக் காலத்தில் வேரூன்றத் தொடங்கிய குலப் பிரிவினை வரவர வளர்ந்து 16ஆம் நூற்றாண்டில் முதிர்ந்து விட்டது. பார்ப்பனர்க்கும் பிறகுலத்தார்க்கும் உள்ள தொடர்பு