உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

பிலேயே

உயர்ந்தவர்களென்றும்,

45

தங்களுக்கொப்பானவர்

உலகத்திலேயே இல்லையென்றும் கூறினதுமல்லாமல், நூல்களி லும் வரைந்துகொண்டனர். அவர்களின் வெண்ணிறமும் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒலிக்கின்ற வடமொழி யொலிகளும் அதற்குத் துணையாயிருந்தன.

(6) மதத் தலைவராதல்

பார்ப்பனர் முருகன், திருமால் முதலிய தனித்தமிழ்த் தெய்வங்களுக்குச் சுப்பிரமணியன், விஷ்ணு முதலிய ஆரியப் பெயர்களையிட்டு, அவர்களை ஆரியத் தெய்வங்களாகக் காட்டி, அதற்கான கதைகளையும் புனைந்துகொண்டு, தமிழ் மதாசிரியர் களாகித் தமிழரின் கோயில் வழிபாட்டையும் மங்கல அமங்கல வினைகளையும் நடாத்தி வரலாயினர்.

(7) தமிழைத் தளர்த்தல்

பார்ப்பனர் தமிழரின் வழிபாடு, மங்கல அமங்கல வினைகள் முதலியவற்றை வடமொழியில் நடத்தியும், நூல்களையும் ஆவணங்களையும் 31 வடமொழியிலெழுதியும், பார்ப்பனருள்ள ஊர்களில், ஊராண்மைக் கழக உறுப்பினர்க்கு ஆரிய மறையறிவைத் தகுதியாக விதித்தும்,33 பல்வகையில் வடமொழியை வளர்த்துத் தமிழை வளர்க்காது போனதுடன், வேண்டாத வடசொற்களைக் கலந்து அதன் தூய்மையையுங் கெடுத்துவிட்டனர்.

(8) பிரித்தாட்சி

பிரித்தல் என்னும் வெல்வழி ஆரியர்க்கே சிறந்த தன்மை யாகும். ஒரு சிறுவகுப்பார் ஒரு பெருவகுப்பாரை வெல்வதற்கு அஃதொன்றே படையாம். பிரமா பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால்வரணத்தாரையும் முறையே, தமது முகம், மார்பு, அரை, கால் ஆகிய உறுப்புகளினின்றும் தோற்றுவித்தார் என்று கூறும்போதே, பார்ப்பனர் நம் நாட்டு மக்களைப் பிரித்துவிடுகின்றனர்.

கல்விக்கு வாயும், போருக்கு மார்பும், இருந்து விற்றலுக்கு அரையும் (அல்லது நிறுத்தலுக்குச் சீர்க்கோலின் நடு நாவும்), 21 செப்புப் பட்டயங்களும் கல்வெட்டுகளும்.

22 சோழவமிச சரித்திரச் சுருக்கம், ப. 53