உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

77

(பவணந்தியுட்படப்) பார்ப்பனர் கசடதப என்னும் வல்லின மெய்களைக்கூடச் சரியா யறிந்தாரில்லை. இது, இவற்றை அவர் வடமொழி ஐவர்க்கங்களின் முதலெழுத்து களோடும் ஒப்பிட்டுக் கூறுவதால் அறியலாம். தமிழிலுள்ள வல்லின மெய்கள் தமிழுக்கு வல்லினமாயினும், வடமொழி வல்லினத்துடன் ஒப்புநோக்க, சற்று மெல்லியவே யாகும். வடமொழிக் கசடதபக்கள் தமிழ்க் கசடதப க்களின் இரட்டிப் பாதலை ஒலித்துக் காண்க.

தமிழ் வாழ்த்து

(பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா)

தரவு 1

"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே தெக்கணமு மதிற்சிறந்த திரவிடநற் றிருநாடும் அத்திலக வாசனைபோல் அனைத்துலகு மின்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே”

2

"பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி யிருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே.

(வதனம் - முகம், தரித்த - அணிந்த, திலகம் - பொட்டு, வாசனை மணம், உதரம் -வயிறு).