84
ஒப்பியன் மொழிநூல்
ஊறு -பிசு, குறுகுறு, சுரசுர, மெத்து.
நாற்றம்-கம், கமகம்.
விரைவு - சடு (சட்), E. sudden, சடார், திடும், திடீர், பொசுக்கு
அச்சம் - துண், திடுக்கு, பே.
இரக்கம் - ஆ, ஆஆஆவாஆகா.
அருவருப்பு - சீ, சே, சை.
வியப்பு-ஓ,ஆ, ஏ, ஐ,ஆஆ -(ஆவா) ஆகா.
-
தெளிவு-ஒஒஒ-ஓவோ ஓகோ.
சுருக்கம் - சிவ், சிவுக்கு.
விரிவு - பா, பளா.
பருமை - பொந்து, பொது, பொதுக்கு.
செறிவு - கொசகொச, மொசுமொசு. கனம் - திண்.
கேடு - நொசநொச.
பொலிவு -சம், (ஜம்).
மூட்சி - குப்.
ஏவல் -உசு (உஸ்).
விளி - தோ, சூ,
பே.
அமைத்தல் - உசு (உஷ்), E. hush.
நுணுகி நோக்கினால், எல்லாக் குறிப்புகளும் ஒலிக் குறிப்பினின்றே தோன்றினமை புலனாகும் ஆ, ஈ, ஊ என்பவை சுட்டடிகள்.
குறுகுறு என்பது காதில் அங்ஙனம் ஒலிப்பது. பிசுபிசு என்பது பசையுள்ள பொருளைத் தொடும்போது தோன்றும் ஒலி திடும் என்பது ஒரு பொருள் திடீர் என்று விழும் ஒலி. ஆ என்பது நோவு தோன்றும்போது அரற்றும் ஒலி. இங்ஙனமே பிறவும்.
பிசு என்னுங் குறிப்பினின்று, பிய், பிசின், பிசிர், பிசினி, பிசினாறி முதலிய சொற்கள் பிறக்கும். இங்ஙனமே பிறவற்றி னின்றும்.