உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்மொழித் தோற்றம்

85

குறிப்புச்சொற்கள் இணைக்குறிலா யிருப்பின், இரட்டைக் கிளவியா யிருப்பது பெரும்பான்மை. ஆனால், சில அடுக்குத் தொடர்களும் இரட்டைக்கிளவிபோல் தோன்றுவதுண்டு; அவற்றைப் பிரித்தறிய வேண்டும்.

கா :

இரட்டைக்கிளவி

குறுகுறு

மடமட

அடுக்குத்தொடர்

மினுமினு (மின்னு மின்னு) சுடுசுடு

இரட்டைக்கிளவி இரட்டித்தே வரும்; தனித்து வந்து பொருள் தராது; அடுக்குச்சொல் தனித்துவந்து பொருள் தரும்.

செக்கச்செவேர், சின்னஞ்சிறு என்பவற்றை இரட்டுக் கிளவி

யெனலாம்.

(3) வாய்ச் சைகையொலி (Oral Gesture)

முதலாவது அழைப்புவிடுப்புகளும் அண்மை சேய்மைப் பொருள்களும் கத்தொலியோடு கூடிய கைச்சைகையினாலேயே குறிக்கப்பட்டன. பின்பு வாய்ச்சைகையோடுகூடிய ஒலிகளாற் கூறப்பட்டன.

அழைப்பு : வா. (பா என்றும் உலக வழக்கில் வழங்கும்.)

வா என்னும் ஒலியை ஒலிக்கும்போது, கீழுதடு மேல் வாய்ப் பல்லைத் தொட்டிறங்குவது, ஒருவன் சேய்மையிலுள்ள வனைத் தன்னிடம் வரச்சொல்லுவதைக் குறிக்கும். இதைக் கைச்சைகையில் கையானது மேலுயர்ந்து கீழிறங்கும் செய்கை யுடன் ஒப்புநோக்குக. விடுப்பு: போ.

போ என்னும் ஒலியை ஒலிக்கும்போது, பகரமாகிய வெடிப் பொலியும் (Explodent) ஒகாரமாகிய கீழ்மேலங்காப்பொலியும், முறையே போக்கையும் சேய்மையையும் குறிப்பன வாகும்.

சுட்டு

வாயை விரிவா யங்காத்தலால் சேய்மையையும், பக்கவாரி யாய் நீட்டிக் கீழ்மேல் ஒடுக்கி யங்காத்தலால் அண்மையையும், இடை