உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

ஒப்பியன் மொழிநூல் நிகர்த்தாய்க் குவித்தங்காத்தலால் இடைமையையும், பக்கவாரியா யொடுக்கிக் கீழ்மேல் நீட்டி யங்காத்தலால் உயரத்தையும் முதற்றமிழர் குறித்தொலித்ததால், முறையே, ஆ ஈ ஊ ஒ என்னும் ஒலிகள் பிறந்திருக்கின்றன. இவற்றை ஒலித்துக் காண்க.

உயரத்தை யுணர்த்துவதை, ஓங்கு, ஒச்சு முதலிய

சொற்களாலறிக.

ஒ...ஒ. கா : ஒய்யாரம்.

២០

ஊ, ஒ - உ. ஒகரத்தை உகரமாகவும் உகரத்தை ஒகரமாகவும் ஒலிப்பது உலக வழக்கு. உயரங்குறித்து முதலாவது தோன்றிய வொலி ஒகாரமே.

ஊங்கு, உம், உம்மை, உம்பர், உம்பல், உத்தரம், உச்சி, உயர், உன்னதம் முதலிய சொற்களில், ஊகார வுகரங்கள் உயர்ச்சி குறித்தல் காண்க.

மேல் என்னும் உயரங்குறித்த சொல், மேற்சொன்ன என்று இறந்த காலத்தையும், இனிமேல் என்று எதிர்காலத்தையும் உண உணர்த்தல் போல, ஊகார வுகரச் சுட்டடிப்பெயர்களும் அவ் விரு காலத்தையும் உணர்த்தும்.

கா : “காணாவூங்கே”

66

உம்மை எரிவாய் நிரயத்தும்"

இறந்தகாலம் எதிர்காலம்

எதிர்காலம் பிற்காலம் என்று சொல்லப்படுவதாலும், பின் என்னும் பெயர் காலத்தைப்போன்றே இடத்தையும் குறித்தலாலும், பின்பக்கம் உப்பக்கம் எனப்பட்டது.

ஆகவே, உகரச்சுட்டு உன்னதம் உச்சி முதலிய சொற்களில் உயரத்தையும்; ஊங்கு, உம்பர் முதலிய சொற்களில் உயரத்துடன் இறந்தகாலத்தையும்; உம், உம்மை என்னுஞ் சொற்களில் உயரத்துடன் எதிர்காலத்தையும், உத்தரம் என்னுஞ் சொல்லில் உயரத்துடன் (நூலின்) பிற்பாகத்தையும் பிற்கூறும் மறுமொழி யையும்; உப்பக்கம் என்பதில் பின்பக்கதையும் முதுகையும் உணர்த்துமென்க.

இடைமைச்சுட்டான உகரமும் உயரச்சுட்டான உகரமும் வெவ்வேறு; முன்னது இயற்கையினாயது, பின்னது ஒகாரத்தின் திரிபு.