உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்மொழித் தோற்றம்

87

உதடுகள் உகரத்தை ஒலிக்கும்போது முன்னும் இகரத்தை ஒலிக்கும்போது பின்னும் செல்வதால், உகர இகரங்கள் முறையே முன்பின் என்னும் பொருள்களையும் அவற்றை அடி ப்படையாகக் கொண்ட பிற கருத்துகளையும் தரும் சொற்களைப் பிறப்பிக்கும்.

கா : ஊங்கு = முன்பு. 241ஆம் பக்கத்தில் உயரக் கருத்தை அடிப்படையாக்கொண்டு எதிர்காலத்தை யுணர்த்துவதாகக் கூறிய உகரம், முன்மைக் கருத்தை அடிப்படியாகக் கொண்டு அக்காலத்தை உணர்த்துவதாகவுங் கொள்ளலாம். ஊங்கு - ஊக்கு. உகை - L.,-Gk. ago, to drive. Act, agent, agency, agenda முதலிய சொற்கள் ago என்னும் மூலத்தினின்றும் பிறந்தவை. உந்து=முற்செலுத்து.

துர - E. drive, A.S. drifan, Ger. treiben, to push.

முன் - முந்து. மூ -மூக்கு - முகம் - முகப்பு. முகம் - நுகம். மூக்கு - முகடு. மூக்கு - முகை - முகிழ். மூக்கு - முக்கு.

முகம் என்பது முதலாவது முன்னால் நீண்டிருக்கின்ற மூக்கைக் குறித்து, பின்பு தலையின் முன்புறமான முகத்தைக் குறித்தது. வடமொழியில் அதை வாய்ப்பெயராகக் கொண்டது பிற்காலம்.

மூக்கு - E. mucus. மூக்கு - E. beak, Fr. bec, Celt. beic. மூக்கு - E-Celt peak. முக்கு - E. nook, Scot. neuk, Gael. - Ir. niuc.

pike (E. and Celt.); pic (Gael.); pig (W.) - a point; spica (L.); spike (E.); spoke (E.) முதலிய சொற்கள் மூக்கு என்பதன் வேறுபாடுகளே. முன் - முனி - நுனி -நுணி -நுண். முனி - முனை - நுனை. நுண் - L. min. இதனின்று minor, minority, minish, minim, minimum, minister, minstrel, minute, minus முதலிய பல சொற்கள் பிறக்கும். முனையைக் கொனை என்பது வடார்க்காட்டு வழக்கு - E. cone, a solid pointed figure. cone, L. conus, Gk. konos.

hone (E), han (A.S.), hein (Ice.), cana (Sans) முதலிய சொற்கள் கொனை என்பதினின்றும் திரிந்தவையே.