தமிழ்மொழித் தோற்றம்
கா : உடையது உடைத்து.
=
கண் + அது = கண்ணது; கண் + து = கட்டு. தாள் + அது = தாளது; தாள் + து = தாட்டு.
அன் + அது = அன்னது; அன் + து = அற்று.
து
பால் + அது = பாலது; பால் + து= பாற்று.
141
பிற தன்மை வினையீறுகள் தன்மைப் பெயர்களும் அவற்றின் திரிபுமாகும்.
ஒருமை : ஏன் - என். (நான்) - (ஆன்) - அன் - அல்
பன்மை : ஏம் -எம்.(நாம்) -ஆம் - அம். (கண்டும் செய்தும் முதலியவற்றிலுள்ள) உம் - ஓம்.
முன்னிலை வினை
முன்னிலைவினை, ஏவல்வினை செயல்வினை என இரு வகைப்படும். செயல்வினை ஒருமை ஈறுகள் முன்னர்க் கூறப்பட்டன.
ஏவல்வினை, ஒருமை பன்மையென இருவகைப்படும். அவற்றுள், ஒருமை பின்வருமாறு எழுவகையாயிருக்கும்:
(1) பகுதி : கா : செய், போது.
(2) முன்னிலைப் பெயரீறுடையது. கா : (செய்நீ) - (செய்தீ)-செய்தி.
(3) வேண்டுகோ ளெதிர்மறைமுற்று. கா : செய்யாய் (செய்).
(4) எதிர்கால வினைமுற்று. கா : செய்வாய்.
(5) நிகழ்கால வினையெச்சம். கா: செய்ய.
(6) தொழிற்பெயர். கா : செயல்.
(7) துணைவினைபெற்றது. கா : செய்ய + விடு = செய்யட்டு.
பன்மையேவல் பின்வருமாறு அறுவகைப்படும்.
(1) முன்னிலைப்பெயரீறு பெற்றது
(நீர்)- (தீர்)- திர்.
நூம் - நும்-உம்.
உம் + கள் = உங்கள்
உம் + (ஈம்) - (இம்) - இன்
கா: செய்திர்.
கா : செய்யும்.
கா : செய்யுங்கள்.
கா : செய்யுமின், செய்மின்.
(2) வேண்டுகோளெதிர்மறைமுற்று. கா : செய்யீர்.