உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




140

ஒப்பியன் மொழிநூல்

நட, கொடு என்பவற்றின் நிகழ்கால வினையெச்சங்கள் நடவ கொட என்றிராமல், நடக்க கொடுக்க என்றிருப்பதையும், சில விடங்களில் கொடுப்பான் என்பது கொடுக்குவான் என்று வழங்குவதையும் நோக்குக. அடைத்து தொலைத்து என்பவை கழக நூல்களில் அடைச்சி தொலைச்சி என வழங்குகின்றன. இவற்றின் பகுதிகள் அடைச்சு தொலைச்சு என்பனவாகும். போது என்பது போகு என்பதன் திரிபு.

தமிழ் பண்படுத்தப்பட்டபோது, சொற்களின் வேரைச் சேராத எழுத்துகளெல்லாம் விலக்கப்பட்டன. அங்ஙனம் விலக்கியபோது, வல்லின மெய்யின் பின்வருபவைமட்டும் விலக்கப்படவில்லை ஒலித்தற் கருமையாகாமைப் பொருட்டு.

இயல்பான வினைவடிவமே முதலாவது தன்மையொரு மைக்கு எதிர்காலத்தில் வழங்கியிருக்கின்றது.

"மடுக்கோ கடலில் விடுதிமி லன்றி மறிதிரைமீன்

படுக்கோ பணிலம் பலகுளிக் கோபரன் றில்லைமுன்றிற்

கொடுக்கோ வளைமற்று நும்மையர்க் காயகுற் றேவல்செய்கோ தொடுக்கோ பணியீ ரணியீர் பலர்நுஞ் சுரிகுழற்கே

99 7

என்னுஞ் செய்யுளிலுள்ள செய்கு என்னு ம் வாய்பாட்டு வினைகளையும், செய்கேன் என்னும் எதிர்கால வினைமுற்று வடிவத்தையும் நோக்குக.

செய்கு என்பது, வினைகள் பாலீறு பெறம் நிகழ் காலவினை தோன்றாததுமான பண்டைக் காலத்தில் தோன்றியது. பன்மை - செய்கும், போதும்.

சேறு என்று

செல்லுது என்பது, பகுதிநீண்டு, செல் +து = ஒருமையிலும், சேறும் என்று பன்மையிலும் ஆகும். இங்ஙனமே கொள்ளுது என்பதும் ஒருமையில் கோடு (கொள் + து) என்றும், பன்மையில் கோடும் என்றும் ஆகும். துவ்வீறு போது என்னும் வினையினின்றும் தோன்றியது. இவற்றையறியாமல், கு டு துறு என்பவும், கும் டும் தும் றும் என்பவும் தன்மைவினைமுற்றீறுகள் எனக் கூறினர் இலக்கணிகள். இங்ஙனமே, படர்க்கை யொன்றன் பாற் குறிப்புவினைமுற் றீறுகளையும் து று டு என்றனர். இம்மூன்றுள், (அது என்பதன் முதற்குறையான) 'து' ஒன்றே உண்மையான ஈறாகும்.

7 திருக்கோவை, 63