உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்மொழித் தோற்றம்

-

139

என்னுமான் - என்மான் என்மன் + ஆர் = என்மனார்

(67. KIT. 21. Y.).

ஒ.நோ: மகனார், சாத்தனார்.

செய்தனன் என்பதில், ஈற்றயல் 'அன்' ஆண்பாலீறே அது குறுகிய வடிவாயிருத்தலின் மேலோர் ‘அன்’ சேர்க்கப்பட்டது. 'ஆன்' ஈறாயின் தனித்தே நிற்கும். ஒரேயீறும் அடுக்கிவரும் என்பதை, மரத்தது என்னும் சொல்லாலறியலாம்.

மரம் + அத்து (அது) + அது = மரத்தது. ஈற்றயல் 'அன்' பொருள் மறைந்தபின் பிறபாலிடங்கட்கும் சென்றது. செய்தன் என்பது திணை பால் தோன்றாத பண்டைக்காலத்த தெனினுமாம்.

இறந்த காலம்

தன்மை வினை

ஒருமை - கண்டு, வந்து, சென்று.

இவை முற்கூறப்பட்ட செய்து என்னும் வாய்பாட்டுப் பண்டை இறந்தகால வினைமுற்றுகள்.

பன்மை

கண்டும், வந்தும், சென்றும். இவை, யாம் நீம் தாம் என்பவற்றைப்போல் பன்மையுணர்த்தும் மகர மெய்யீற்றவை.

எதிர்காலம்

ஒருமை - செய்கு, போது.

உகரம்

இது இயல்பான வினைவடிவம். முதன்முதல் எல்லாச் சொற்களும் உயிரிலேயே இற்றன. இப்போது மெய்யீற்றனவா யிருப் பவையெல்லாம் முதலாவது உயிரீற்றனவாகவே யிருந்தன. எல்லாச் சொற்களின் ஈற்றிலும் அல்லது இகரம் ஒலிப்பெளிமைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இவற்றுள் உகரத்தை Enunciative 'u' என்பர் கால்டுவெல் ஐயர். இவ் வுகரம் குற்றியலுகரம். இது சில வினையீற்றில் வகரமெய் சேர்ந்து 'வு' என வழங்கும்.'வு' 'கு' ஆகும். இஃது ஓரியன்மை (uniformity) நோக்கிப் பிறசொற்களின் ஈற்றிலும் கொள்ளப்பட்டது. வ-க, போலி

கா : கண்ணு, நில்லு; கையி, பாயி; ஏவு, மருவு; ஆகு, போகு.