12
வேர்ச்சொற் கட்டுரைகள்
ஊர்தேடு. 230). 5. கிளைதறித்தல். 6. வெட்டுதல். "தாளும் தோளும் அரக்கி” (விநாயகபு. 42: 4). 7. குறைத்தல். “காரரக்கும் கடல்” (தேவா. 46 : 8). 8. முழுதுமுண்ணுதல்.
அரக்கு- அரக்கன் = அழிப்பவன்.
அரப்பு = அழுக்குத் தேய்க்கும் கட்டி அல்லது தூள்.
அரம்பு = குறும்பு. அரம்பன் = குறும்பன்.
அரமகள் = வருத்தும் பெண்தெய்வம், தேவமகள்.
ஒ.நோ: அணங்கு = வருத்தும் பெண்தெய்வம், தேவமகள்.
அரம்பையர் = தேவமகளிர்.
"அரம்பையர்ச் சேருவ ரன்றே”
(நைடத. நிலா.13)
அரளுதல் = அஞ்சுதல்.
அரள் - அரட்டு - அரட்டன் = துன்புறுத்துவோன், துன்புறுத்தும் குறுநில மன்னன்.
அரட்டமுக்கி = துன்புறுத்தும் குறுநில மன்னனை அடக்கும்
செங்கோலரசன்.
அரற்றுதல் = துன்பத்திற் கதறுதல்.
அர் - அரி.
அரிதல் = பொடியாய் நறுக்குதல் அல்லது சிறிய பொருளை அறுத்தல்.
அரிதாள் = கதிரறுத்த நெல்தாள்.
அரிவி - இருவி = அரிதாள்.
அரிவாள்- சிறிதாய் அறுக்கும் வாள்வகை.
அரிவாள்மணை = அரிவாள் பதித்த பலகை அல்லது கட்டை.
அரிவாள்முனைப் பூண்டு - அரிவாள் முனையிலுள்ள தேங்காய் திருகிபோன்ற இலையுள்ள பூண்டு.
அரித்தல் = 1. அரித்தொழுகுதல். 2. சிறிது சிறிதாய்க் கறையான் (சிதல்) போல் அறுத்தல். 3. தினவெடுத்தல், புல்லரித்தல், நுண்ணியதாய் வலித்தல். 4. வெட்டுதல். 5. அழித்தல்.
கோடரி = கிளையை வெட்டும் வாள். Skt. kuthara,
கோடரி- கோடாரி-கோடாலி.
அரி, அரிமா = பிற வுயிரினங்களை அழிக்கும் விலங்கு.