<> செந்தமிழ் வள்ளல் சீதக்காதி (அளவிலான முத்துக்களும் அதன் நொறுங்கிய துகள்களும்) சிறந்த மருத்துவ குணம் உடையதாகக் கருதப்பட்டது. இத்தகைய முத்துக்களது வணிகத்தில் போர்ச்சுக்கல் நாட்டு அரசுக்கு பெருத்த வருவாய் கிட்டியதால் போர்ச்சுக்கல் நாட்டு அரசு மட்டுமல்லாமல் சில தனியார்களும் இந்த வணிகத்தில் மிகுதியாக ஈடுபட்டனர். இதனால் போர்ச்சுக்கல் நாட்டு வணிகர்களும், அரசு அலுவலர்களும் கிழக்கரையிலும் , அடுத்துள்ள வேதாளையிலும் மிகுதியாகக் குடியேறினர். கிழக்கரையில் முத்துக்கள் விற்பனைக்கான சந்தை ஒன்று இருந்ததை கீழக்கரை சொக்கநாதர் கோவிலில் உள்ள கி.பி.1562- ஆம் ஆண்டு கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது. கி.பி.பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் கிழக்கரையில் கூடிய பதினென் விஷயத்தார் என்ற வணிகக்குழு சொக்கதாதர் கோவிலுக்கு மகமையாக அதுவரை நூறு முத்துக்கு ஒரு குழி முத்து கொடுக்கப்பட்டு வந்த பழக்கத்தை மாற்றி நூறு பணத்திற்கு அரை பணம் வழங்குவது என முடிவு செய்ததையும் அந்த கல்வெட்டு தெரிவிக்கிறது. ஆனால் கி.பி.1584-ல் இந்த முத்து வணிகத்தில் எதிர்பாராத நிலைமை ஏற்பட்டது. அப்பொழுது நிலவிய தட்பவெப்பநிலை காரணமாக கீழக்கரை கடல் பகுதியிலிருந்த முத்துச்சிப்பி பூச்சிகள் வடக்கே யாழ்ப்பாண கரைக்கு இடம் பெயர்ந்து சென்றதால் கீழக்கரை முத்துக்களின் உற்பத்தி மிகவும் குறைந்துவிட்டது. இவ்விதக் கீழக்கரை முத்துக்களைப்பற்றிய செய்திகள் வரலாற்றில் பதிவு பெற்று இருந்தாலும் போர்ச்சுக்கீசியரைத் தவிர இங்கிருந்த மரைக்காயர் என அழைக்கப்பட்ட தமிழ் முஸ்லி மக்களும் முத்து வணிகத்தில் போர்ச்சுக்கீசியருக்கு இணையாக ஈடுபட்டிருந்தனர். இன்னொரு ஆவணத்தின்படி கீழக்கரை முத்து வாணிபத்தை தங்களது உடமையாக்கிக் கொள்வதற்காக கீழக்கரையில் இருந்த போர்ச்சுக்கீசிய அலுவலருக்கு கையூட்டு முயற்சியில் தோல்வியுற்ற காயல்பட்டினர் நெய்னார்களைப் பற்றி செய்தி (தெரிய வருகிறது. امـ
பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/34
Appearance