உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

=

வேர்ச்சொற் கட்டுரைகள்

கொடுவரி = வளைந்த வரியுள்ள வேங்கை. கொடுவாயிரும்பு தூண்டில் முள். "கொடுவா யிரும்பின் கோளிரை துற்றி” (அகம். 36 : 2).

=

கொடு-கொடுக்கு = 1. தேள், நட்டுவாய்க்காலி முதலிய வற்றின் வளைந்த கொட்டும் உறுப்பு. 2. ஆடையின் அழகு தொங்கல். "கச்சை புனைந்ததிலே விட்டான் பெருங்கொடுக்கு” (திருவாலவா. 30 : 9). 3. கிழிந்த ஆடைத் தொங்கல். கோலுங் கொடுக்கும் என்பது உலகவழக்கு. ON. krokr, F. croc, ME. croc, E. crook, ம. கொடுக்கு.

கொடுக்கு- கொடுக்கன் = தேள்வகை. கொடுக்கன்- கொடுக்கான். கொடுக்கு - கொடுக்கி = 1. கதவையடைத்து இடும் இருப்புக் கொக்கிப்பட்டை. 2. கொடுக்குப் போன்ற முள்ளுள்ள தேட் கொடுக்கிச்

செடி

வல்

கொடு- கொடுப்பு = குறடுபோன்ற அலகு.

கொடு- கொடி = 1. வளைந்து படரும் நிலைத்திணை வகை. ஒ. நோ கொடி வள்

வல்லி

=

-

=

வள்ளி கொடி. 2. கொடிபோன்ற மகளிர் கழுத்தணி. 3. ஆடவர் அரைஞா 4. கொடிபோலுங் கயிறு. 5. நீளம். 'பழன வெதிரின் கொடிப்பிணை யலளே” (ஐங். 91). 6. ஒழுங்கு. "கருங்கொடிப் புருவம் ” (சீவக. 658). 7. வாய்க்கால், கிளை வாய்க்கால். 8. வழிமரபு, கொடிவழி. 9.கிளையடுப்பு, கொடியடுப்பு. 10. துணிக்கொடி. 11.மூதேவியின் காக்கைக் கொடி, காக்கை. “சேட்டைக் குலக்கொடியே” (திருக்கோ. 235). 12. கொடிமின்னல். 13. பாம்பு. பாம்பு கடித்தலைக் கொடித்தட்டல் என்பது நெல்லைநாட்டு மங்கல வழக்கு. 14. நீண்டு செல்லும் ஒடுங்கிய பாதை. கொடித்தடம் = ஒற்றையடிப்பாதை.

கொடி-கொடிச்சி = குறிஞ்சிநிலத்துப் பெண், குறிஞ்சிநிலத் தலைவி. “கொடிச்சி காக்கும் பெருங்குரலேனல்" (ஐங். 296). கொடிபோல் விரைந்து வளர்வதால் பெண்ணைப் பெண்கொடி யென்னும் வழக்கையும், முருகன் தேவியின் பெயராகிய வள்ளி யென்னுஞ் சொல் கொடியென்று பொருள்படுவதையும், நோக்குக.

ம., தெ.,து. கொடி.

கொடி - கொடிறு கொடிறு = 1. வளைந்த குறடு. “கொடிறும் பேதையும் கொண்டது விடாது" (திருவாச. 4 : 63). 2. குறடு போன்ற அலகு. 4:63). "கொடிறுடைக்குங் கூன்கையர்” (குறள். 1077).

கொள்- கொண்- (கொண்பு)- கொம்பு = 1. வளைந்த விலங்கின் தலையுறுப்பு. 2. ஊதுகொம்பு. "குறிக்குங் கொம்பினன்” (கம்பரா.