56
துளையிடுதல்.
வேர்ச்சொற் கட்டுரைகள்
குத்துதல் = 1. முட்டியாற் குத்துதல். "குத்துமோதை” (கம்பரா. கிட்கிந்தா. வாலிவதைப். 43). 2. கொம்பினால் முட்டுதல். 3. ஊசி, ஆணி முதலியவற்றால் "உனைக் காது குத்த” (திவ். பெரியாழ். 2 : 3 : 1). 4. கத்தியாற் குத்துதல். 5. புள்ளி குத்துதல். 6. முத்திரையடித்தல். 7. உலக்கையால் இடித்தல். 8. குத்தித் தைத்தல். 'பூம்புனல் நுழையும் புரையக் குத்தி” (பெருங். வத்தவ. 12 : 48). 9. குத்திப் பறித்தல். 10. குத்திக் களைதல். 11. பறவை கொத்துதல். 12. கொத்தித் தின்னுதல். “கானக் கோழி கதிர்குத்த” (பொருந. 222). 13. ஊன்றுதல் “பூந்தலைக் குந்தங் குத்தி" (முல்லைப். 41). 14. செங்கலைச் செங்குத்தாக வைத்தல். “கல்லைக் குத்திக் கட்டு” (உ.வ.) 15. வெள்ளம் அல்லது பேரலை கரையில் மோதுதல். "வையை கொதித்தகன் கரைகுத்தி (திருவிளை. விடை. 10). 16. உடம்பு அல்லது உறுப்பு நோவெடுத்தல். "தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு" (திருவள். வெ. மா.) 'குத்தலுங் குடைச்சலும்’ (உ.வ.) 17. மனம் புண்படச் சொல்லுதல். 18. காய்ச்சிய பாலில் உறை மோர் ஊற்றுதல். 'பிறை குத்த வேண்டும்' (உ. வ.) 19. நிலத்திற் படிந்திருத்தல். 20. முட்டுத் தாங்குதல். 21. செங்குத்தாதல். 22. நேராதல்.
ம., க., து. குத்து, தெ. குத்து (guddu).
குத்த வைத்தல்
(நெல்லை வழக்கு).
=
புட்டம் நிலத்திற் படியுமாறு உட்கார்தல்
குண்டிகுத்துதல் = குத்தவைத்தல் (நாகூர் மரைக்காயர் வழக்கு). குத்துக்கல் = செங்குத்தாக நிற்குங் கல்.
குத்துவிளக்கு = நிலத்திற் படிந்து நிற்குமாறு பாதம் வைத்த தண்டு
விளக்கு.
குத்து = 1. கைப்பிடி (குத்தும் முட்டிக்கை) யளவு. 'ஒரு குத்துச் சோறு’ (உ. வ.). 2. கைப்பிடியளவான தொகுதி 'குத்துக்குத்தாய் நட்டால் கோட்டை கோட்டையாய் விளையுமா?” (பழமொழி).
குத்துச்செடி = அடர்ந்த சிறுசெடி.
குத்து-குத்தி- குதி = நிலத்திற் குத்தும் குதிங்கால்.
"குதிபந்தி னிரம்பு பேரெழில் வாய்ந்திடில்" (காசிகண். மகளிர்.
10).தெ., க.குதி (gudi).
குதித்தல் = 1. மேலெழும்பிக் குதிங்கால் அல்லது பாதம் நிலத்திற் குத்துமாறு ஊன்றி நிற்றல். 2. நீர்ப்பொருள் எழும்பி விழுதல். “மலர்தேன் குதிக்க” கூத்தாடுதல். 4. செருக்குக் கொள்ளுதல். 5. பரபரப்படைதல். 6. குதித்துத் தாண்டு தல்,
(தஞ்சைவா.
67).
3.