உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

வேர்ச்சொற் கட்டுரைகள்

நட - நடம். நடமாடுதல் = 1. உலாவுதல். 2. நோய் நீங்கி நடந்து செல்லுதல். 3. அடைபட்டிருந்து வெளிவருதல். 4. தீயவர் திரிதல். இங்கு இரவில் திருடர் நடமாடுகின்றனர் (உ.வ.). 5. வழங்குதல். இன்று கள்ளப்பணம் நடமாடுகிறது (உ.வ.). 6. பரவிவருதல்.

தெ.நடயாடு.

நடமாட்டம் = 1. நடந்து செல்கை. அவன் பாயும் படுக்கையுமா யிருக்கிறான். ஒருமாதமாய் நடமாட்டமில்லை (உ.வ.). 2. வழங்குகை.

தெ. நடையாட்ட.

நட நடை = 1. நடந்து செல்கை. "கோலூன்றிச் சோர்ந்த நடையினராய்” (நாலடி. 13). 2. கோள்களின் செலவு. 3. நடைவேகம். "விடைபொரு நடையினான்” (கம்பரா. எழுச்சி. 10). 4. வழி (பிங்.). 6. வாசலையடுத்த உட்பக்கம். 7. இடைகழி. "அரக்கர் கிடைகளு நடைகளும்" (இராமநா. சுந். 3). 8. கப்பலேறும் வழி. 9. சாலையோர நடைவழி. 10. அடி. “பகட்டாவீன்ற கொடுநடைக் குழவி”(பெரும்பாண். 243). 11. நடவை. மூன்று நடை தண்ணீர் எடுத்தேன், மணல் வண்டி எத்தனை நடை வந்தது? (உ.வ.). 12. ஒழுக்கம். 13. ஒழுக்க நூல். “நன்றாக நடைபலவும் நவின்றார் போலும்” (தேவா. 722: 11). 14. இயல்பு என்றுங் கங்குலா நடைய தோரிடம்” (சேதுபு. கந்தமா. 69). 15. வழக்கம். 16. தொழில். "மாயோனிகளாய் நடைகற்ற வானோர் பலரும்” (திவ். திருவாய். 1:5:3). 17. வாழ்க்கை நடப்பு. “நடைப்பரிகாரம்” (சிறுபாண். 104). 18. அன்றாடப் பூசை. “நடையும் விழவொடு நாடொறு மல்குங் கழுமலத்துள்" (தேவா. 152 : 8). 19. சொற்றொடரமைப்பு வகை. 'ஒன்றல்லவை பல தமிழ்நடை” (காரிகை. செய். 4, உரை). தூய தமிழ்நடையைப் புதுப்பித்தவர் மறைமலையடிகள் (உ.வ.).

ம. நட, தெ. நட, க. நடெ.

நட நடத்து. நடத்துதல் = 1. நடக்கச் செய்தல். 2. நடத்திச் செல்லுதல். 3. நிகழ்த்துதல். 4. மேற்பார்த்தல். 5. பிறரிடம் ஒழுகுதல். ஆசிரியர் மாணவரை அன்பாய் நடத்துவார் (உ.வ.). 6. கற்பித்தல். ஆசிரியர் இன்று மூன்று பாடம் நடத்திவிட்டார் (உ.வ.). 7. ஆண்டு நடத்துதல். கூட்டத்தை நடத்துகிறவர் யார்?

ம.நடத்துக, க.நடசு.

நடத்து – நடாத்து. ஆங்கில அரசர் இரு நூறாண்டு இந்தியாவிற் செங்கோல் நடாத்தினர்.